தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியை பல்வேறு உலக நாட்டின் பிரபல நாளேடுகள் பாராட்டி செய்தி வெளியிட்டு வருகின்றனர். வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத பல மக்கள் நலத்திட்டங்களை தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருவதாக அத்தகைய ஊடங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது.
குறிப்பாக, பெண்களின் கல்வியை முன்னேற்றும் வகையில், அரசுப்பள்ளியில் படித்து, கல்லூரி படிக்கச் செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகை, குடும்ப தலைவிக்கு உதவித்தொகை மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம் என பல முற்போக்கு திட்டங்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.
ஆட்சிக்கு வந்தநாள் முதல் எந்தவொரு சிறு குறையும் வந்துவிடக்கூடாது, மக்களுக்கு இடையூறு இல்லாமல் அனைத்து பணிகளையும் முடிக்கவேண்டும், அதிகாரிகள் கவனமுடன் செயல்பட வேண்டும் என துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டு கண்காணித்து வருகிறார்.
இந்தசூழலில் சில இடங்களில் சில அதிகாரிகளின் கவனக்குறைவால் நடக்கும் சில பிரச்சனைகளை பா.ஜ.க - அ.தி.மு.க கும்பல் மற்றும் பா.ஜ.க ஆதரவு ஊடகங்கள் சில ஊதி பெரிதாகும் வேலையை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.
அப்படி சமீபத்தில் குடிநீர் குழாய் மற்றும் இருசக்கர வாகனத்துடன் சாலை அமைத்த விவகாரத்தை பா.ஜ.க ஆதரவு ஊடகம் கட்டம் கட்டி பூதாகரமாக்கியது. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, சாலை முறையாக அமைக்கப்பட்டது. இதில் பிரச்சனையை பேச முந்திக்கொண்டு முன்னாள் வந்த ஊடகங்கள் சில, சரிசெய்த சாலையை காண்பிக்கத் தவறியதில் தனது அறத்தை இழந்தது நாம் பார்த்தோம்.
அதுமட்டுமல்லாது போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சொல்லாத தகவலை, சொல்லியதாக கூறி போலி செய்தியை பரப்பிய ஊடகங்கள் அவர் சொன்ன மறுப்பு செய்தியை வெளியிட தவறியது. சமீபத்தில் தமிழ்நாட்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வடஇந்திய செய்தி நிறுவனம் இத்தகைய போலி செய்தியை பரப்புவதையே தனது வாடிக்கையாக வைத்துள்ளது. அந்த வடஇந்திய ஊடகம் பா.ஜ.க ஆதரவு நிலையே கடந்த காலங்களில் எடுத்துள்ளதை நம்பால் பார்க்க முடிகிறது.
செய்தியின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, துறைசார்ந்த அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு செய்தியை வெளியிடாமல், கிடைத்த சொற்ப தகவலை வைத்துக்கொண்டு, புதிதாக ஒரு போலி செய்தியை வெளியிட்டு தி.மு.க அரசுக்கு எதிராக அவபெயரை ஏற்படுத்த துடிக்கிறது அந்த ஊடகம்.
ஒருவேளை அத்தகைய செய்தியின் உண்மை நிலவரம் வெளியான பிறகு, தவறான செய்தியை வெளியிட்டதற்கு மன்னிப்புகோராமல், விளக்கம் அளித்த தகவலை வெளியிட்டு தன்மீதான கரையை துடைத்துக்கொள்கிறது. இது ஊடகத்தின் அறமா எனவும் பலருக் கேள்வி எழுப்புகின்றனர்.
அத்தோடு இல்லாமல் நேற்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்காவில் புதிதாக தொடங்கப்பட்ட கட்டத்தில், கழிவறை புகைப்படத்தை வைத்து வெளியான செய்தி பெரும் சர்ச்சையானது; திட்டமிட்டு சர்ச்சையாக்கியது.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா செயல்பட்டு வருகிறது. இதில், சிப்காட் திட்ட அலுவலகத்திற்கு ரூபாய் 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
புதிய கட்டிடத்தை திறந்து வைத்த நிலையில் சில பணிகள் முடிவடையாமல் உள்ளது, அவை அனைத்து விரைவில் முடிந்து, பிறகு பயன்பாட்டிற்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் ஒரே அறையில் இரண்டு வெஸ்டர்ன் டாய்லெட் அமைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையானது.
இதுகுறித்து உண்மை தன்மை என்ன என்பதை திட்ட அலுவலர் கவிதாவிடம் கேட்போது, “இரண்டு வெஸ்டர்ன் டாய்லெட் இடையில் தடுப்பு சுவர் ஏற்படுத்தி இரண்டு கழிவறைகளாக முழுமை பெறும்” எனத் தெரிவித்தார். மேலும் இவ்விவகாரம் தொடர்பாக தகவல்கள் பெற்றப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியும் கூறியுள்ளார்.
இதனிடையே தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி ராஜா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இறுதிகட்ட வேலைகள் முடியும் முன்பு எடுக்கப்பட்ட படம் அது. Divider பொருத்தும் பணிகள் நடைபெறுகின்றன. #GomiyumGang ஆட்சி நடக்கும் CowBeltல் கழிவறைகள் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள். இங்கே அரைவேக்காடு செய்திகளை பரப்பும் வேலையை விட்டுவிட்டு அங்கே மக்களுக்கு நல்லது செய்வது நல்லது” எனத் தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு தரப்பினரும் போலி செய்தி வெளியிடும் ஊடகத்தின் மீது தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.