திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள நாளங்காடியின் பின்புறம் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் போலிஸார் அப்பகுதிக்குச் சென்று வாலிபர் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் இறந்த வாலிபர் மலையாண்டிப்பட்டியைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் சந்தோஷ் என்பது தெரியவந்ததும். மேலும் இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்துள்ளார்.
மேலும், சந்தோஷ் கடந்த 6 மாதமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அடிமையாகி இருப்பதும் சமீபத்தில் கூட வீட்டிலிருந்த தங்க மோதிரத்தை எடுத்துக் கொண்டு ரம்மி விளையாடியதும் விசாரணையில் தெரியவந்தது.
நேற்று முன்தினம் விட்டை விட்டுச் சென்ற சந்தோஷ் மாலை வரை குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் தனது வாடஸ் ஆப்பில் ஒரு ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அதில் “என்னுடைய மரணத்திற்கு முழுக்காரணம் ஆன்லைன் ரம்மபி தான். அதில் நான் அடிமையாகி அதிகப் பணம் இழந்துள்ளதால் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் போன் செய்த போது அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இந்நிலையில் தான் ரயில் தண்டவாளத்தில் சந்தோஷ் சடலமாக மீட்கப்பட்டார். கல்லூரி மாணவர் ஆன் லைன் ரம்மியால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.