தமிழ்நாடு

ஹீலியம் சிலிண்டர் வெடித்தில் உடல் சிதறி ஒருவர் பலி.. உ.பி. சேர்ந்த பலூன் வியாபாரி மீது வழக்குப்பதிவு!

அஜாக்கிரதையாக இருந்து உயிரிழப்பை ஏற்படுத்திய, உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பலூன் வியாபாரி அனார்சிங் என்பவர் மீது கோட்டை போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.

ஹீலியம் சிலிண்டர் வெடித்தில் உடல் சிதறி ஒருவர் பலி.. உ.பி. சேர்ந்த பலூன் வியாபாரி மீது வழக்குப்பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருச்சி தெப்பக்குளம் அருகே பிரபல ஜவுளிக் கடை முன்பு உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த அனார்சிங் என்பவர் பலூன் வியாபாரம் செய்து வந்துள்ளார். வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வரும் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகையும் என பண்டிகை காலங்களாக இருப்பதால் திருச்சி கடை வீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது.

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பண்டிகை கால விற்பனையின் போது மக்கள் கூட்டத்தில், குழந்தைகளை கவரரும் வகையில் ஆட்டோவில் வந்து அனார்சிங் பலூன் வியாபாரம் செய்துகொண்டு இருந்துள்ளார்.

இந்த நிலையில் ஹீலியம் கேஸ் சிலிண்டர் மூலம் பலூனை காற்றை நிரப்பி விற்பனை செய்து வந்துள்ளார். பலூனை ஊதுவதற்காக பயன்படுத்தப்படும் ஹீலியம் சிலிண்டரை ஆட்டோவில் வைத்துள்ளார். ஆட்டோவில் ஹீலியம் சிலிண்டரை ஏற்றிக்கொண்டிருக்கும் பொழுது ஹீலியம் சிலிண்டர் திடீரென வெடித்துள்ளது.

ஹீலியம் சிலிண்டர் வெடித்தில் உடல் சிதறி ஒருவர் பலி.. உ.பி. சேர்ந்த பலூன் வியாபாரி மீது வழக்குப்பதிவு!

இந்த விபத்தில் சின்னதாராபுரத்தை சேர்ந்த ரவிக்குமார் (எ) மாட்டு ரவி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். துணி வாங்க வந்த, கீழ அம்பிகாபுரத்தை சேர்ந்த ஜீவானந்தம் (17) என்ற வாலிபர் படுகாயமடைந்து, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிலிண்டர் வெடித்த இடத்தில், தடயவியல் துறை ஏடிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் தடயங்களை சேகரித்தனர். அஜாக்கிரதையாக இருந்து உயிரிழப்பை ஏற்படுத்திய, உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பலூன் வியாபாரி அனார்சிங் என்பவர் மீது கோட்டை போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories