சிவகங்கை மாவட்டம் கீழடியைச் சேர்ந்தவர் கௌதம். இவர் மதுரை சாக்ஸ் கல்லூரியில் 2019-ல் மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் படிப்பு முடித்துள்ளார். இவர் வேலைதேடிக்கொண்டே எலெக்ட்ரானிக்ஸ் வேலைகளையும் பார்த்து வந்துள்ளார். இவரது தந்தையும் எலெக்ட்ரிக்கல் மெக்கானிக்காக இருந்துள்ளார்.
இவர் தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை வைத்து 50 வருடம் பழமையான ஜீப் ஒன்றினை வாங்கியுள்ளார். பின்னர் அதில் இருந்த டீசல் இன்ஜினை எடுத்து விட்டு லித்தியம் பேட்டரியைப் பயன்படுத்தி தானே இன்ஜினை உருவாக்கியுள்ளார்.
பின்னர் 40 ரூபாய் மதிப்புள்ள மின்சாரத்தை வைத்து ஒருமுறை சார்ஜ் ஏற்றினால் 200 கிமீ தூரம் வரை செல்லும் வகையில் அதை மாற்றியுள்ளார். மணிக்கு 60 கிமீ வேகத்தில் செல்லும் அவரின் இந்த கார் ஒரு நாளுக்கு 200 கிமீ ஓட்டினாலும், 9 வருடத்துக்கு பேட்டரியை மாற்றவேண்டியது இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
அவரின் இந்த சாதனையை பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரும் அவரை பாராட்டியுள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திராவும் பாராட்டியுள்ளனர்.