கடந்த 2016-ம் ஆண்டு திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவரும், கவிதா என்ற இளம்பெண்ணும் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை தங்களது ஆட்டோவில் கடந்தியுள்ளனர். மேலும் அவரை வினோத் பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார். அதோடு இதை வெளியே சொல்லக்கூடாது என்றும், சொன்னால் குடும்பத்தையே கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து சிறுமி அழுதுகொண்டே வீட்டிற்கு சென்றபோது, அவரது பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது தனக்கு நடந்தவற்றை கதறி அழுதுகொண்டே கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் வினோத் மற்றும் கவிதா ஆகிய இரண்டு பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை நிறைவடைந்து நேற்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் குற்றவாளி வினோத்திற்கு 0 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த கவிதாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இதையடுத்து இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.