தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மேல் தெருவைச் சேர்ந்தவர் பைனான்ஸ் அதிபர் சிவக்குமார். இவரது மகன் சாம்சரன் (17). திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பாலிடெக்னிக் படித்து வருகிறார்.
இவர் வீட்டிலிருந்து வெளியே வந்தபோது மர்ம நபர்கள் சிலர் சொகுசு காரில் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அவரது தந்தை சிவக்குமாருக்கு செல்போன் மூலம் 1 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதனால் அதிர்ந்து போன சிவக்குமார் இதுகுறித்து பாலக்கோடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். இதில், சிவக்குமாரின் பக்கத்து வீட்டுக்காரரான சத்தீஷ்குமார் தான் தனது கூட்டாளிகள் ஆறு பேர் உதவியுடன் மாணவனைக் கடத்தியது தெரியவந்தது.
மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் கல்லூரி மாணவனை அடைத்து வைத்திருப்பதும் தெரியவந்தது. அங்கு சென்ற காவல் துறையின் அவர்களைச் சுற்றிவளைத்து ரி மாணவனை மீட்டனர்.
இந்த கடத்தலுக்கு ஈடுபட்ட பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த சத்தீஷ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளான அமாணிமல்லாபுரத்தை சேர்ந்த அருண்குமார், கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை பாஞ்சாலி நகரை சேர்ந்த விஜி , சந்தோஷ் (22), சூளகிரி பகுதியைச் சேர்ந்த முரளி (32), அளேசீபம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (38), உத்தனபள்ளியை சேர்ந்த கோகுல் (30), உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்து செய்தனர்.