தமிழ்நாடு

’மாணவர்களுக்கான வரப்பிரசாதம் காலை சிற்றுண்டி திட்டம்’.. தி.மு.க அரசுக்கு தே.மு.தி.க பாராட்டு!

தமிழ்நாடு அரசின் காலை சிற்றுண்டி திட்டத்திற்கு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வரவேற்றுப் பாராட்டியுள்ளார்.

’மாணவர்களுக்கான வரப்பிரசாதம் காலை சிற்றுண்டி திட்டம்’.. தி.மு.க அரசுக்கு தே.மு.தி.க பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு அறிவித்து அமல்படுத்தி வருகிறது. அதன்படி நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 110விதியின் கீழ் அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதையடுத்து அறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாளான நேற்று மதுரையில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து இன்று பிற மாவட்டங்களிலும் காலை சிற்றுண்டி திட்டத்தை அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கிவைத்தனர்.

’மாணவர்களுக்கான வரப்பிரசாதம் காலை சிற்றுண்டி திட்டம்’.. தி.மு.க அரசுக்கு தே.மு.தி.க பாராட்டு!

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் இந்த காலை சிற்றுண்டி திட்டத்திற்குப் பலரும் பாராட்டி வருகின்றனர். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தமிழ்நாடு அரசின் காலை சிற்றுண்டி திட்டத்திற்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பதிவில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மதிய உணவுத் திட்டத்துடன் சேர்த்து காலை உணவுத் திட்டத்தை அமல்படுத்தி இருக்கும் தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலை உணவுத் திட்டம் மாணவர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். அதனை தே.மு.தி.க சார்பில் வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories