விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (38). இவர் சென்னை பழைய விமான நிலைய சரக்ககத்தில், தனியார் சரக்கு நிறுவனத்தில் சரக்கு வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். சவுந்தரராஜனின் குடும்பம் விழுப்புரத்தில் உள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை, சவுந்தரராஜனின் சரக்கு வேன், பழைய விமான நிலைய வளாகத்தில் சரக்ககம் அருகே நின்று கொண்டிருந்தது.அந்த வேனின்,பின்புறம் சவுந்தரராஜன் துாக்கில் தொங்கிக்கொண்டிருந்தாா்.
இதுகுறித்து சென்னை விமான நிலைய போலிஸூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலிஸார் சவுந்தரராஜனின் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதோடு சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்துகையில், சவுந்தரராஜன் நேற்று இரவு மனைவியுடன் செல் போனில் நீண்ட நேரம் பேசியுள்ளார். இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது, தான் தற்கொலை செய்யப்போவதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சவுந்தரராஜனின் மனைவி, சக டிரைவர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்து, கணவரை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இந்த நிலையில், இன்று காலை சவுந்தரராஜனை காணவில்லை என தேடிய போது, அவருடைய சரக்கு வேன் பின்புறம் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது. எனவே குடும்ப பிரச்னை காரணமாக சவுந்தரராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறுகின்றனா்.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”