தமிழ்நாடு

6 லட்சம் பேர் பங்கேற்ற ‘பெரியாரை வாசிப்போம்’ நிகழ்வு..சேலம் பெரியார் பல்கலைக்கழகம் சாதனை !

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், நடைபெற்ற ‘பெரியாரை வாசிப்போம்’ என்ற மாணவர் பெருந்திரள் நிகழ்வில் சுமார் 6 லட்சம் பேர் கலந்துகொண்டனர்.

6 லட்சம் பேர் பங்கேற்ற  ‘பெரியாரை வாசிப்போம்’ நிகழ்வு..சேலம் பெரியார் பல்கலைக்கழகம் சாதனை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், ‘பெரியாரை வாசிப்போம்’ என்ற மாணவர் பெருந்திரள் வாசிப்பு நிகழ்வு நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தில் துணைவேந்தர் ஜெகநாதன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள், பல்கலைக்கழக ஆசிரியர்கள் உள்ளிட்ட 2,500 பேர் மற்றும் மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளின் மாணவர்கள், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளின் மாணவர்கள் உள்ளிட்ட 6 லட்சம் பேர் கலந்துகொண்டனர்.

6 லட்சம் பேர் பங்கேற்ற  ‘பெரியாரை வாசிப்போம்’ நிகழ்வு..சேலம் பெரியார் பல்கலைக்கழகம் சாதனை !

காலை 10 மணி முதல் காலை 10.20 மணி வரை அவரவர் வகுப்பறைகளில் இருந்து பெரியார் குறித்த 3 பக்க வரலாற்று தகவல்களை ஒருமித்து வாசித்தனர். மாணவர்களிடையே வாசிப்பு திறனை மேம்படுத்தவும், இளைய சமுதாயத்தினர் இடையே அரிதாகிவிட்ட புத்தகம் வாசிக்கும் பழக்கத்தினை மேம்படுத்தவும் இந்த நிகழ்வு நடைபெற்றது.

சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 609 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் 4,01,378 பேர், ஆசிரியர்கள் 18,285 பேர், பெரியார் பல்கலைக் கழகம் மற்றும் அதன் இணைவு பெற்ற கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் 1,77,313 பேர், ஆசிரியர்கள்,பணியாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 5,96,976 பேர் இந்த நிகழ்வில் பங்கேற்றதாக பல்கலைக்கழக துணைவேந்தர் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories