அரசியல்

"தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவின் வளர்ச்சிக்கே வித்திட்டவர் அறிஞர் அண்ணாதான்" - அண்ணாதுரை செய்தது என்ன ?

என் திட்டங்களை மாற்ற நினைத்தால் மக்கள் வெகுண்டெழுவார்கள் என்ற அச்சமும் கூடவே வரும். அந்த அச்சம் இருக்கிற வரையில், அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்.

"தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவின் வளர்ச்சிக்கே வித்திட்டவர் அறிஞர் அண்ணாதான்" - அண்ணாதுரை செய்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பேரறிஞர் அண்ணா பிறந்த 1909-ம் வருடம் செப்டம்பர் 15-ம் நாள் இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய நாள்.. தற்போது இந்தியா பிரிட்டனை பின்னுக்கு தள்ளி ஐந்தாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக மாறியதற்கு அந்த நாள் எப்படி பின்னணியில் இருந்தது என்பதை அறியவேண்டும்.

பழங்காலம் முதலே அறிவியலிலும், கல்வியிலும், மருத்துவத்திலும் புகழ்பெற்று திகழ்ந்தது தமிழ்நாடு. மேல்நாட்டினர் எழுத்தை உருவாக்கிக்கொண்டிருந்த நாளில் நாம் இங்கு அழியாபுகழ்பெற்ற இலக்கியங்களையும், பெருங்காப்பியங்களையும் உருவாக்கிக்கொண்டிருந்தோம். அதிலும் கடல்கடந்து தமிழகத்தில் எல்லையை விரிவாக்கிய சோழர்களின் ஆட்சியில் தமிழ்நாடு உலக வர்த்தகத்தின் மையப்புள்ளியாக இருந்தது.

ஆனால், அதன்பின் நடந்தது என்ன? சனாதனத்தின் கோர பிடியில் சிக்கிய தமிழ்நாடு தனது பழம்பெருமையை இழக்கத்தொடங்கியது. கல்வியில் சிறந்த பலர் இருந்த தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சமூகத்தினரே கல்வி கற்க வேண்டும், இந்த சமூகத்தில் பிறந்தால் இந்த வேலையே செய்யவேண்டும் என தமிழரின் பெருமையே குலையத் தொடங்கியது.

"தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவின் வளர்ச்சிக்கே வித்திட்டவர் அறிஞர் அண்ணாதான்" - அண்ணாதுரை செய்தது என்ன ?

எதற்கும் ஒரு முற்றுப்புள்ளி இருக்கதானே செய்யும். அந்த முற்றுப்புள்ளி 20-ம் நூற்றாண்டில் வைக்கப்பட்டது. பெரியார் என்னும் ஒரு மாமனிதர் பல ஆண்டுகளாக 'சனாதனம்' என்னும் மூட நம்பிக்கையில் மூழ்கி கிடந்த தமிழ்நாட்டின் இருளை அகற்ற ஊர் ஊராக பிரச்சாரம் செய்தார். அவர் பேசிய கருத்துக்கள் தமிழ் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அவரின் பேச்சை கேட்ட பலர் பல ஆண்டுகளாக தங்களை சுற்றி வைக்கப்பட்டிருந்த கட்டை அவிழ்க்கத்தொடங்கி பெரியாரை பின்பற்றினர். அத்தகைய பெரியாரின் முதன்மை தளபதியாக வலம் வந்தவர்தான் அறிஞர் அண்ணா.

தலைவனுக்கேற்ற தளபதியாக பெரியாரின் கொள்கைகளை நாடு முழுவதும் பரப்பினார். ஆங்கிலேயரிடமிருந்து நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தால் மட்டும் போதாது, அனைத்து மக்களுக்கும் சமஉரிமை கிடைப்பதே முக்கியம் எனக் கருதி சுயமரியாதை கருத்துக்களை தமிழ்நாடு முழுவதும் பரப்பினார்.

"தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவின் வளர்ச்சிக்கே வித்திட்டவர் அறிஞர் அண்ணாதான்" - அண்ணாதுரை செய்தது என்ன ?

சுயமரியாதை கருத்துக்களை மக்களிடம் பரப்பினால் மட்டும் போதாது அதை சட்டமாக்க அதிகாரம் கையில் இருந்தால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்த அறிஞர் அண்ணா, தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்தார். 1949-ல் திராவிட முன்னேற்ற கழகம் உருவானது. தலைவர் பதவியை பெரியாருக்காக வைத்து கட்சியின் பொதுச்செயலாளரானார் அறிஞர் அண்ணா.

இந்த தருணத்தில் அப்போது முதலமைச்சராக இருந்த ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தை கொண்டுவந்தார். அண்ணாவின் தலைமையில் கொதித்தெழுந்தது திமுக. பொதுமக்களும் திமுகவின் பின் அணிதிரண்டார்கள். விளைவு.., குலக்கல்வித் திட்டம் கைவிடப்பட்டது.

தன் பேச்சால் மக்களை கொள்ளை கொண்ட அண்ணாவின் பின் மக்கள் கூட்டம் திரண்டது. தேர்தல் பாதையும் வெற்றிப்பாதையாகவே அண்ணாவுக்கு அமைந்தது. முதல் தேர்தலில் 15 எம்.எல்,ஏக்கள் கோட்டைக்கு சென்றனர். சென்னை மாநகராட்சி தேர்தலில் வெற்றதன் மூலம் மேயர் பதவி. இரண்டாவது சட்டமன்ற தேர்தலில் 50 இடங்களில் வெற்றி என வெற்றிப்பாதையில் தொடர்ந்து சென்றது திமுக.

"தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவின் வளர்ச்சிக்கே வித்திட்டவர் அறிஞர் அண்ணாதான்" - அண்ணாதுரை செய்தது என்ன ?

இந்த தருணத்தில்தான் ஒன்றிய அரசு இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தியை கொண்டுவர முடிவெடுத்தது. இதற்கு எதிராக கொதித்தெழுந்தது தமிழ்நாடு. மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரும் இந்தி திணிப்புக்கு எதிராக தெருவில் இறங்கி போராடினார். அறிஞர் அண்ணா உள்ளிட்ட தி.மு.க தலைவர்கள் கைதாகினர். எனினும் தி.மு.க தொண்டர்கள் போராட்டத்தில் உறுதியாக நின்றனர்.

இறுதியில் ஒன்றிய அரசு பின்வாங்கியது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் போராட்டம் அபாரவெற்றிபெற்றது. அப்போது யாருக்கும் தெரியாது. இந்த போராட்டம்தான் தமிழ்நாட்டை தலைசிறந்த மாநிலமாக மாற்றப்போகிறது என்று.

இந்தி எதிர்ப்பில் உறுதியாக நின்ற தி.மு.கவின் பின்னால் மக்கள் அணிதிரண்டார்கள். 1967-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில், தமிழ்நாட்டின் ஆட்சியை பிடித்தது திமுக. காங்கிரஸ் கட்சிக்கு அடுத்ததாக இந்திய மாநிலம் ஒன்றில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த முதலாவது அரசியல் கட்சி என்ற சாதனையையும் திமுக வசம் வந்தது.

"தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவின் வளர்ச்சிக்கே வித்திட்டவர் அறிஞர் அண்ணாதான்" - அண்ணாதுரை செய்தது என்ன ?

தேர்தலில் வென்று முதலமைச்சராக அறிஞர் அண்ணா இருந்தது என்னவோ இரண்டு வருடங்கள்தான். ஆனால் அந்த இரண்டு வருடத்தில் தமிழ்நாடு எந்த வழியில் நடக்கவேண்டும் என்பதை காட்டிவிட்டு சென்றார். சரி! அண்ணா செய்தது என்ன ?

திமுக ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டுக்குப் பிறகு விழா ஒன்றில் அண்ணா பேசினார். அதின் சாராம்சம் இதுதான், "ஓராண்டுக்கு முன்னால், நான் பதவிக்கு வந்தேன். இந்த ஓராண்டில் மூன்று முக்கியமான காரியங்களைச் செய்திருக்கிறேன்.

* ஒன்று - சுயமரியாதை திருமணத்துக்குச் சட்டஅங்கீகாரம்.

* இரண்டு - தாய்த் திருநாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர்மாற்றம்.

* மூன்று - தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை என்றும், தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள்கை அறிவிப்பு.

இதைப் பார்த்துவிட்டுப் பலருக்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது. இவர்களை விட்டுவைக்கலாமா? ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். 'முடியுமா' என்று நான் சவால் விடமாட்டேன். உங்களால் முடியும்.ஆனால், கலைத்து விட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து அண்ணாதுரை கொண்டுவந்த இவற்றை எல்லாம் மாற்ற வேண்டும் என்று கருதினாலே, உடனே மக்கள் வெகுண்டெழுவார்கள் என்ற அச்சமும் கூடவே வரும். அந்த அச்சம் இருக்கிற வரையில், அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள். அந்த அச்சம் எவ்வளவு காலத்துக்கு இருக்கிறதோ, அவ்வளவு காலத்துக்கும் ஆட்சியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்வதாகப் பொருள்” என்றார்.

"தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவின் வளர்ச்சிக்கே வித்திட்டவர் அறிஞர் அண்ணாதான்" - அண்ணாதுரை செய்தது என்ன ?

ஆம், இப்போதுவரை அண்ணாதான் தமிழ்நாட்டை ஆள்கிறார். தற்போது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் இந்திக்கு பதிலாக ஆங்கிலத்தை நாம் தொடர்ந்ததுதான். தமிழ்நாடு மட்டும் அல்ல, 90-களின் பிற்பகுதியில் இந்தியா உலக அரங்கில் வியத்தகு வளர்ச்சி அடைத்ததற்கு காரணமும் ஆங்கிலத்தை நாம் தொடர்ந்து பின்பற்றியதால்தான்.

ஒருவேளை அப்போது நாம் இந்தியை ஏற்றுக்கொண்டிருந்தால் தமிழ்நாடு மட்டும் அல்ல, இந்தியாவே பாதிக்கப்பட்டிருக்கும். அப்போது தமிழ்நாடு இந்தியை எதிர்த்தபோது ஏளனம் செய்த பிற மாநிலங்கள் கூட இப்போது நமது வழியை பின்பற்ற காரணம் அண்ணா வழியில் தமிழ்நாடு தொடர்ந்து நடந்ததுதான்.

இப்போது பா.ஜ.க இந்தியா முழுவதும் இந்தியை வலுக்கட்டாயமாக திணித்து வருகிறது. பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்கள் இந்தியா முழுவதும் "இந்தி.. இந்தி" என்று பேசினால் கூட தமிழ்நாடு வந்தால் இந்தியை தவிர்க்கிறார்கள். அவ்வளவு ஏன் தமிழக பாஜக தலைவர்கள் கூட இந்தியை கொண்டுவருவோம் என்று இங்கு பேசமுடியாது. இதற்கு எல்லாம் காரணம் யார் என்றால் அண்ணா அப்போது வகுத்து தந்த பாடம்தான்.

ஆம், அண்ணாவை தவிர்த்து இங்கு யாரும் அரசியல் பேசமுடியாது. "நான் கொண்டுவந்த திட்டங்களை மாற்ற வேண்டும் என்று கருதினாலே, உடனே மக்கள் வெகுண்டெழுவார்கள் என்ற அச்சமும் கூடவே வரும். அந்த அச்சம் இருக்கிற வரையில், அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள். அந்த அச்சம் எவ்வளவு காலத்துக்கு இருக்கிறதோ, அவ்வளவு காலத்துக்கும் ஆட்சியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்வதாகப் பொருள்” என்று அண்ணா கூறியதுதான் எத்தனை உண்மை !

-பிரவின் ஜோஸ்வா

banner

Related Stories

Related Stories