நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னிகா தேவி காலனி பகுதியில் கரடி ஒன்று ஆறு மாத காலமாக இரண்டு குட்டிகளுடன் உலா வருகிறது.
கடந்த 5 மாத காலமாக தேயிலைத் தோட்டம் மற்றும் வனப்பகுதியில் மட்டுமே உலா வந்த இந்த கரடிகள் கடந்த 10 நாட்களாக பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டங்களில் இருந்து, தனது குட்டிகளுடன் வெளியேறும் அந்த கரடி கன்னிகா தேவி தேயிலைத் தோட்டக் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து உலா வருகிறது.
வழக்கம்போல் இன்று காலை கன்னிகா தேவி காலனியின் முகப்பு வாயிலில் உள்ள கேட் அருகே கரடி வந்தபோது அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர் லட்சுதி என்பவரின் வீட்டில் வளர்க்கப்படும் நாய் ஒன்று கரடியை கன்னிகா தேவி காலனிக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி விரட்டியது.
அந்த கரடியும் வளர்ப்பு நாயை எந்த ஒரு தொந்தரவும் செய்யாமல் மீண்டும் தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. வளர்ப்பு நாய் கரடியை குடியிருப்புக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி விரட்டியது அப்பகுதியில் இருந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ஆரவாரத்துடன் நாயை பாராட்டி மகிழ்ந்தனர். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.