தமிழ்நாடு

வீட்டை விட்டு வந்த பாட்டியை மீட்ட காவலர்கள்.. வாசலில் போட்டுவிட்டு செல்லுமாறு கூறிய கொடூர உறவுக்கார பெண்!

பேத்தியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வந்து அமர்ந்திருந்த பாட்டியை காவலர்கள் மீட்டு அவரது வீட்டில் கொண்டு சேர்ந்தனர்.

வீட்டை விட்டு வந்த பாட்டியை மீட்ட காவலர்கள்.. வாசலில் போட்டுவிட்டு செல்லுமாறு கூறிய கொடூர உறவுக்கார பெண்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் உள்ள கீழவீதியில் நேற்று 75 வயது மூதாட்டி ஒருவர், அங்கிருக்கும் நடைபாதையில் அமர்ந்திருந்தார். அப்போது இவரை கண்ட அங்கிருந்த காவலர்கள் அவரிடம் சென்று விசாரித்தனர்.

அப்போது அவர், தனது பெயர் கோமதி என்றும், வையூர் கிராமத்தில் வசித்து வருவதாகவும், தான் தனது பேத்தியுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை சமாதானபடுத்தி அவரது வீட்டிற்கு கொண்டு விடுவதாக அதிகாரிகள் கூறினர். அப்போது தான் வீட்டிற்கு செல்ல விரும்பவில்லை என கூறி வராமல் இருந்துள்ளார்.

வீட்டை விட்டு வந்த பாட்டியை மீட்ட காவலர்கள்.. வாசலில் போட்டுவிட்டு செல்லுமாறு கூறிய கொடூர உறவுக்கார பெண்!

பின்னர் அவரது வீட்டின் முகவரியையும், மொபைல் எண்ணையும் வாங்கி, அவர்களை தொடர்பு கொண்ட அதிகாரிகள் இது குறித்த குடும்பத்தாரிடம் பேசினர். பின்னர் இருதரப்பினரிடமும் சமரசம் பேசினர். இதைத்தொடர்ந்து வீட்டிற்கு வர முரண்டு பிடித்த பாட்டியை, காவல் அதிகாரிகள் அப்படியே தூக்கி கொண்டு ஆட்டோவில் ஏற்றி அவரை வீடு வரை சென்று விட்டனர்.

அப்போது ஆட்டோவை விட்டு இறங்க மறுத்த பாட்டியை கடின முயற்சி செய்து இறக்கி வீடு வரை கொண்டு சென்றனர். அப்போது பாட்டியின் உறவுக்கார பெண் ஒருவர், அவரை வாசலிலே போட்டு விட்டு செல்லுமாறு கடினத்தன்மையுடன் நடந்துகொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வயது முதிர்வினால், பிள்ளைகளே தங்களது பெற்றோர்களை கவனித்து கொள்ளாமல் இப்படி தனியாக விடுவதால் தான் முதியோர் இல்லம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

banner

Related Stories

Related Stories