தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பாரதிராஜா. பல படங்கள் இயக்கி தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழ்ந்த அவர் தற்போது வயது முதிர்வின் காரணமாகப் படங்கள் இயக்குவதை விட்டுவிட்டு, படங்களில் நடித்து வருகிறார்.
அவருக்கு திடீரென அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில தனது உடல் நிலை குறித்து பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் "என் இனிய தமிழ் மக்களே,
வணக்கம். நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன்.
மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம் என்று என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன்.
மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் இணையதளம் மூலமும் அன்புடன் விசாரித்த மற்றும் நலம் பெற பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம்.
அன்புடன், பாரதிராஜா " என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் உடல்நலம் குறித்து மருத்துவமனை தரப்பிலும் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், பாரதிராஜா அவர்களின் உடல்நிலை தற்போது நல்ல நிலையில் சீராக உள்ளதாக மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் "திரு. பாரதிராஜா அவர்களின் உடல்நிலைகுறித்து பத்திரிக்கைச் செய்தி சென்னை MGM மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ள திரைப்பட இயக்குநர் திரு.பாரதிராஜா அவர்களுக்கு தற்போதுள்ள உடல்நிலை குறித்தும், இதுவரை அவருக்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சை புற்றியும், மேலும் அவர்களுக்கு எந்த விதமான உயர்தர தீவிர சிகிச்சைகள் மேற்கொள்வது என்பது குறித்தும், மருத்துவர்கள் திரு. பாரதிராஜவை வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக விசாரித்தும் சுமார் 2 மணி நேரம் மருத்துவ ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன" என்று கூறப்பட்டுள்ளது.