தமிழ்நாட்டில் தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, பள்ளி - கல்லூரி மாணவர்களிடம் சாதிய பாகுபாட்டை வேறொரு அறுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் அவ்வப்போது சில இடங்களில் ஆசிரியர்களே மாணவர்களிடம் சாதி ரீதியான தாக்குதலிலும் தூண்டுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்படி ஈடுபடும் ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் சென்னையில் இயங்கி வரும் பிரபல கல்லூரியாக பச்சையப்பன் கல்லூரியில் பல்வேறு துறைகள் உள்ளது. இதில் தமிழ்த்துறையின் தலைவராக பணியாற்றி வந்தவர் அனுராதா. கடந்த சில தினங்களுக்கு முன்பு
இவர் அவரது வகுப்பு மாணவர் ஒருவரிடம் சாதி குறித்தும், மற்ற மாணவர்களின் சாதி குறித்தும் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது.
அந்த ஆடியோவில் துறை தலைவர் அனுராதா, மாணவனின் சமூகத்தை கேட்டதோடு, மற்ற மாணவர்களின் சமூகத்தையும் கேட்டறிந்தார். மேலும் குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை கூறி 'நம்பலமா' என்று கேள்வியும் எழுப்பினார். இது குறித்த ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாணவர்களிடம் சாதிய பாகுபாடை திணிக்கும் கல்லூரி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், சமூகத்தை குறிப்பிட்டு பேசிய கல்லூரி பேராசிரியை அனுராதாவை பணியிடை நீக்கம் செய்து பச்சையப்பன் அறக்கட்டளையின் பேராட்சியர் நீதிபதி ராஜூ அனுமதியுடன் கல்லூரி செயலாளர் துரைசாமி உத்தரவிட்டுள்ளார்.