தமிழ்நாடு

IT நிறுவனங்களில் போனஸ் நிறுத்தம்?.. ஊழியர்கள் அதிர்ச்சி: நிறுவனங்கள் எடுத்த முடிவு சரியா? பின்னணி என்ன?

இந்தியாவில் செயல்பட்டு வரும் IT நிறுவனங்களின் ஊழியர்களின் போனஸ் தொகையை நிறுத்தப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

IT நிறுவனங்களில் போனஸ் நிறுத்தம்?.. ஊழியர்கள் அதிர்ச்சி: நிறுவனங்கள் எடுத்த முடிவு சரியா? பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் ஐ.டி நிறுவனங்களில் செல்வாக்கு படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஒருகாலத்தில் ஐ.டி நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு அதிகமான ஊதியம் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அங்கும் ஊதிய வெட்டு, ஆட்கள் குறைப்பு போன்றவை தொடர்கதையாக மாறிவிட்டது.

கொரோனா காலத்தில் ஐ.டி நிறுவனங்கள் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டது. இதனால் பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை கொரோனா என்ற இக்கட்டான காலத்திலும் வேலையிலிருந்து வெளியேற்றியது.

IT நிறுவனங்களில் போனஸ் நிறுத்தம்?.. ஊழியர்கள் அதிர்ச்சி: நிறுவனங்கள் எடுத்த முடிவு சரியா? பின்னணி என்ன?

மேலும் தங்கள் நிறுவன ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலைபார்க்க வலியுறுத்தியது. கொரோனா தொற்று வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை இன்னமும் வீட்டிலிருந்தே வேலை பார்க்க வலியுறுத்தி வருகிறது. இதனால் ஊழியர்கள் மன மற்றும் உடல் ரீதியான பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்குத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவில் செயல்படும் இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற ஐ.டி நிறுவனங்கள் கடும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.

IT நிறுவனங்களில் போனஸ் நிறுத்தம்?.. ஊழியர்கள் அதிர்ச்சி: நிறுவனங்கள் எடுத்த முடிவு சரியா? பின்னணி என்ன?

இதனால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக ஐ.டி நிறுவனங்கள் இப்படியான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் போனஸ் போன்ற சிறப்புச் சலுகைகளை நிறுத்த உள்ளதாக முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவு ஐ.டி நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories