தமிழ்நாடு

"ஒன்றரை ஆண்டில் இத்தனை சாதனைகளா" -தி.மு.க-வின் சாதனைகளை பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

திமுக ஆட்சியமைத்த ஒன்றரை ஆண்டில் செய்யப்பட்ட சாதனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டுள்ளார்.

"ஒன்றரை ஆண்டில் இத்தனை சாதனைகளா" -தி.மு.க-வின் சாதனைகளை பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக கொங்கு பகுதிக்கு சென்றுள்ளார். இன்று பொள்ளாச்சியில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் 55 ஆயிரம் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.

பின்னர் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் "திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல, ஒரு கொள்கைக் கோட்டையாகும்.

இங்கே நீங்கள் கட்சிக்காரர்களாக அல்ல, கொள்கைக்காரர்களாகச் செயல்பட வேண்டும்.

திராவிடம் என்ற சொல்லுக்குள் நமது கொள்கைகள் அடங்கி இருக்கிறது.

திராவிடம் என்பது சமூக நீதி.

திராவிடம் என்பது சமதர்மம்.

திராவிடம் என்பது மனிதநேயம்.

திராவிடம் என்பது மொழிப்பற்று.

திராவிடம் என்பது இன உரிமை.

திராவிடம் என்பது மாநில சுயாட்சி.

திராவிடம் என்பது கூட்டாட்சித் தத்துவம்.

ஒட்டுமொத்தமாக சொல்வதாக இருந்தால் திராவிடம் என்பது எல்லார்க்கும் எல்லாம் என்று சொல்லும் கருத்தியல் ஆகும்.அத்தகைய திராவிட மாடல் ஆட்சி இப்போது தமிழ்நாட்டில் நடந்து கொண்டு இருக்கிறது.

"ஒன்றரை ஆண்டில் இத்தனை சாதனைகளா" -தி.மு.க-வின் சாதனைகளை பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

இந்த ஆட்சி ஒராண்டு காலத்தில் செய்த சாதனைகள் - இதுவரை எந்த ஆட்சியும் செய்யாத சாதனைகள் ஆகும்.

இப்போது இந்தியாவில் எந்த மாநில அரசும் செய்யாத சாதனைகள் ஆகும்.

* பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி

* பெட் ரோல் விலை 3 ரூபாய் குறைப்பு

* ஆவின் பால் விலை 3 ரூபாய் குறைப்பு

* நகைக்கடன்கள் ரத்து

* கூட்டுறவுக் கடன்கள் ரத்து

* அரசு பணியிடங்களில் தமிழ் தகுதித்தேர்வு கட்டாயம்

* வேளாண்மைத் துறைக்காக தனி நிதிநிலை அறிக்கை

* இல்லம் தேடிக் கல்வி

* மக்களைத் தேடி மருத்துவம்

* நான் முதல்வன்

* இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48

* தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்கத் தேடல்

* அறிவுசார் நகரம்

* சமத்துவ புரங்கள்

* உழவர் சந்தைகள்

* அரசு முன் மாதிரிப்பள்ளிகள்

* பத்திரிக்கையாளர் நலவாரியம்

* எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம்

* இலக்கிய மாமணி விருது

* கலைஞர் எழுதுகோல் விருது

* பேராசிரியர் அன்பழகனார் பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டம்

* பெருந்தலைவர் காமராசர் கல்லூரிகள் மேம்பாட்டுத் திட்டம்

* முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு

* உங்கள் தொகுதியில் முதலமைச்சர்

* சமூகநீதி நாள் உறுதிமொழி

* சமத்துவநாள் உறுதிமொழி

* வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாள்

* கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்

* அன்னைத் தமிழில் அர்ச்சனை

* அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்

* மாவட்டம் தோறும் புத்தகச் சந்தைகள்

* புத்தகப் பூங்கா அமைக்க நிரந்தர இடம்

* கோவில் நிலங்கள் மீட்பு

* 10 கலை அறிவியல் கல்லூரிகள்

* 11 புதிய ஐடிஐ நிறுவனங்கள்

* காவல் ஆணையம்

* பொருநை அருங்காட்சியகம்

* மீண்டும் மஞ்சப்பை

* 75 ஆவது சுதந்திர தின நினைவுத்தூண்

* சென்னையில் 230 கோடியில் மாபெரும் மருத்துவமனை

* மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம்

* சென்னையில் கலைஞர் நினைவு மண்டபம்

- என்று தினந்தோறும் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.

"ஒன்றரை ஆண்டில் இத்தனை சாதனைகளா" -தி.மு.க-வின் சாதனைகளை பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

அரசு பள்ளிப் பிள்ளைகளுக்கான காலை சிற்றுண்டித் திட்டத்தை விரைவில் தொடக்கி வைக்க இருக்கிறேன்.அரசு பள்ளியில் படித்த மாணவியர் உயர்கல்வி பெற கல்லூரிகளுக்குள் நுழைந்தால் அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம்.

ஒரே நேரத்தில் கல்வியிலும், நல்வாழ்விலும், தொழில் துறையிலும், சமூக நலத்துறையிலும் செய்து வரும் சாதனைகளைப் பார்த்து பலருக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.என்னிடமே சிலர் சொல்கிறார்கள் -'இந்தளவுக்கு ஆட்சி சிறப்பாக நடைபெறும் என்று நாங்கள் முதலில் எதிர்பார்க்கவில்லை' என்று சிலர் சொல்கிறார்கள். நான் அவர்களுக்குச் சொல்வேன் -

நான் சொல்லிச் செய்கிறவன் அல்ல, சொல்லாமல் செய்பவன்!

தலைவர் கலைஞரது முழக்கம் என்பது'சொன்னதைச் செய்வோம் -செய்வதைச் சொல்வோம்' என்பது ஆகும்.எனது பாணி என்பது 'சொல்லாதையும் செய்வோம்-சொல்லாமலும் செய்வோம்' என்பது ஆகும்." எனக் கூறினார்.

banner

Related Stories

Related Stories