தமிழ்நாடு

"மூவண்ணக் கொடியையும்,விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகிகளையும் போற்றுவோம்"-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் !

தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் உடன்பிறப்புகளுக்கு சுதந்திர தின வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார்.

"மூவண்ணக் கொடியையும்,விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகிகளையும் போற்றுவோம்"-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம் நாளை (15-08-2022) கொண்டாடப்படவுள்ளது. இதற்கான கொண்டாட்டத்தில் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் உடன்பிறப்புகளுக்கு சுதந்திர தின வாழ்த்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் "நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் உத்தரவாத மடல்.இந்திய ஒன்றியத்தின் 76-ஆவது விடுதலைநாள் விழா, உணர்வில் கலந்த கொண்டாட்டமாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமான சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், நாட்டுக் கொடியை உயர்த்துகிறேன்.

"மூவண்ணக் கொடியையும்,விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகிகளையும் போற்றுவோம்"-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் !

மாநில முதலமைச்சர்கள் அந்தந்த மாநிலத்தில் கொடி ஏற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவருக்கு நெஞ்சத்தில் நன்றி செலுத்தி, மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்திய ஒன்றியமும் அதில் இணைந்துள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களும் மேலும் வலிமைபெற உறுதியேற்பதுதான் விடுதலைப் பவள விழாவான இந்த 75ஆம் ஆண்டு நிறைவின் கொண்டாட்டங்களின் நோக்கமாக உள்ளது.

"மூவண்ணக் கொடியையும்,விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகிகளையும் போற்றுவோம்"-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் !

இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டில் மூவண்ணக் கொடியையும், விடுதலைக்காகப் பாடுபட்ட உண்மையான தியாகிகளையும் போற்றுவோம்." என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories