தமிழ்நாடு

“பால்கனியில் இருந்து கையசைத்து விட்டு சென்று விடுவார்” - ரஜினி பற்றிய கேள்விக்கு வைகோ சொன்ன ‘நச்’ பதில்!

"ரஜினி அரசியல் பற்றி பேசுவது அவருக்கே புரியாது. எனவே யாரும் அதை சீரியஸா எடுக்க வேண்டாம்" என்று ம.தி.மு.க மூத்த தலைவர் வைகோ பேட்டியளித்துள்ளார்.

“பால்கனியில் இருந்து கையசைத்து விட்டு சென்று விடுவார்” - ரஜினி பற்றிய கேள்விக்கு வைகோ சொன்ன  ‘நச்’ பதில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கோவை மாவட்டம் வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள ம.தி.மு.க அலுவலகத்தில், மூத்த தலைவர் வைகோ தலைமையில் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்த வைகோ பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

“பால்கனியில் இருந்து கையசைத்து விட்டு சென்று விடுவார்” - ரஜினி பற்றிய கேள்விக்கு வைகோ சொன்ன  ‘நச்’ பதில்!

அப்போது பேசிய அவர், "ம.தி.மு.க புத்துணர்ச்சி பெற்று, மீண்டும் தமிழக அரசியல் திசையை தீர்மானிக்கும் சக்தியாக வளர்ந்து வருகிறது. கோவை ம.தி.மு.க-வின் கோட்டை. அறிஞர் அண்ணா பிறந்தநாளை ம.தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட உத்தரவிட்டுள்ளோம்.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் சிந்தனை கொண்ட கட்சிகளை வீழ்த்த தி.மு.க-வுடன் இலட்சிய கொள்கைகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். இந்தியாவிலே சிறப்பான ஆட்சியை திமுக நடத்தி வருகிறது. புதிய திட்டங்கள், செயல்பாடுகளை செயல்படுத்தி வருகிறது.

“பால்கனியில் இருந்து கையசைத்து விட்டு சென்று விடுவார்” - ரஜினி பற்றிய கேள்விக்கு வைகோ சொன்ன  ‘நச்’ பதில்!

ஒன்றிய அரசு கொண்டு வந்த GST-யால் ஏழை மக்கள் தான் பாதிப்படைகிறார்களே தவிர, அம்பானியும் - அதானியும் அல்ல. பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வால் மற்ற பொருட்களின் விலை உயர்கிறது. இதனால் எளிய மக்கள் தான் பாதிப்படைகிறார்கள்" என்றார்.

“பால்கனியில் இருந்து கையசைத்து விட்டு சென்று விடுவார்” - ரஜினி பற்றிய கேள்விக்கு வைகோ சொன்ன  ‘நச்’ பதில்!

தொடர்ந்து பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்த் குறித்த கேள்விக்கு, "நடிகர் ரஜினிகாந்த் சொல்வது யாருக்கும் புரியவில்லை; அது அவருக்கும் புரிவதில்லை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் எனக் கூறுகிறார்.

ஆட்களை சேர்த்ததுக்கு பிறகு நான் அரசியலுக்கு வரவில்லை என்று பால்கனியில் இருந்து கையசைத்து சென்று விடுகிறார். எனவே, நடிகர் ரஜினிகாந்தை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்'' என்றார்.

banner

Related Stories

Related Stories