கேரளா, கர்நாடகாவில் கடுமையான மழை பெய்து வரும் நிலையில், அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் முக்கிய நதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடி வருகிறது.
அதிலும் குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் கர்நாடகத்தில் காவிரியில் கட்டப்பட்டுள்ள அணைகள் நிரப்பிவழிகின்றன. இதனால் அதிலிருந்து மொத்த நீரும் தமிழ்நாட்டுக்கு திருப்பிவிடப்படுகிறது.
இதனால் காவிரி, மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் உள்ள மக்களுக்கு முன்னரே வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழக அரசு விடுத்துள்ளார். அதுமட்டுமின்றி திறந்து விடப்படும் நீரின் அளவையும் அவ்வப்போது ஊடங்களுக்கு தமிழ்நாடு நீர்வளத்துறை சார்பில் வெளியிடப்படுகிறது.
இது தவிர முன்னறிவிப்பின்றி அணைகளில் இருந்து நீரை திறந்துவிடக்கூடாது என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இந்த சூழலில் சில ஊடகங்கள் முன்னறிவிப்பு இல்லாமல் தண்ணீர் திறந்ததாகவும் இதனால் ஏராளமானோர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டதாகவும் செய்தி வெளியிட்டன. அதனை சில பா.ஜ.க ஆதரவினரும் இதுதான் வாய்ப்பு என தி.மு.க அரசுக்கு எதிராக பொய் செய்தியை பரப்பினர்.
இந்த நிலையில், பாஜகவினர் பரப்பிவந்த அந்த செய்தி பொய் என்பதும், அது 2021ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி ஆந்திராவின் Mandapalli என்ற ஊரில் ஏற்பட்ட வெள்ளம் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. இந்த தகவலை ITW factcheck ஆதாரத்தோடு நிரூபித்துள்ளது. இந்த செய்தி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.