இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ.க முக்கிய கட்சியாக இருந்தாலும் தமிழ்நாடு கேரளத்தில் பொருட்படுத்தப்படாத கட்சியாகவே பா.ஜ.க இப்போதும் இருந்து வருகிறது. மத்தியில் ஆட்சியில் இருப்பதால் அந்த கட்சியின் மாநில கட்சிகள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
தாமரை மலராத தமிழ்நாட்டில் அதை மலரவைக்க பா.ஜ.க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் அந்த கட்சியில் மக்கள் செல்வாக்கு வாய்ந்த தலைவர்கள் யாரும் இல்லாததால் பிற கட்சியில் இருக்கும் அதிருப்தியாளர்களை இழுத்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக மக்களுக்கு நன்கு அறிமுகமான திரை பிரபலங்களை தங்கள் கட்சியில் சேர்த்து வருகிறது. சமீபத்தில் மறைந்த நடிகரும் இயக்குநருமான ராஜசேகரின் மனைவி தாரா ராஜசேகர் பா.ஜ.க.வின் இணைந்ததாக அக்கட்சியினர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில், அந்த தகவல் பொய் என்பதும், பூனைக்கு சோறு வைத்துக்கொண்டவரை மேடை ஏற்றி சால்வை அணிவித்து பாஜகவின் இணைந்ததாக பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
பூனைக்கு சோறு வைத்துக்கொண்டவரை அங்கு இருந்தவர்கள் மனு கொடுக்க சிலர் அழைத்து சென்று அண்ணாமலை இருந்த மேடையில் ஏற்றியுள்ளனர். அங்கு தாரா ராஜசேகர் அண்ணாமலையிடம் தன் மனு தொடர்பாக கூறும் முன்னரே அவருக்கு சால்வை அணிவித்து அவர் பிரச்சனையை கூட கேட்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக முன்னணி ஊடகம் ஒன்றில் செய்தியும் வெளியாகியுள்ளது.