தமிழ்நாடு

“இதுதான் என் ஆசை.. 8 வயதில் சதுரங்கத்தில் அசத்தும் பாலஸ்தீன சிறுமி” : யார் இந்த ராண்டா செடர் ?

44-வது சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இளம் வீராங்கனையான பாலஸ்தீனத்தில் இருந்து வந்து கலக்கி கொண்டிருக்கும் ராண்டா செடர் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.

“இதுதான் என் ஆசை.. 8 வயதில் சதுரங்கத்தில் அசத்தும் பாலஸ்தீன சிறுமி” : யார் இந்த ராண்டா செடர் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

சென்னையில் நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட் தொடரில் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார் ராண்டா செடர். உலக சாம்பியன்கள், அனுபவம் மிக்க கிராண்ட் மாஸ்டர்களுக்கு மத்தியில் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் ராண்டாவின் வயது வெறும் எட்டு. இந்த சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்றிருக்கும் மிகவும் இளம் வீரர் இவர்தான்.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவரான ராண்டா, தன் நாட்டில் நிலவும் அத்தனை பிரச்னைகளுக்கும் நடுவே இந்த விளையாட்டைக் கற்றார். இப்போது மிகப் பெரிய அரங்கில் தன் திறமையை நிரூபித்துக்கொண்டிருக்கிறார். சனிக்கிழமை (நேற்று) கொமோரோவின் ஃபஹிமா அலி முகமதுவை 39 நகர்வுகளில் வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார் ராண்டா.

“இதுதான் என் ஆசை.. 8 வயதில் சதுரங்கத்தில் அசத்தும் பாலஸ்தீன சிறுமி” : யார் இந்த ராண்டா செடர் ?

பத்திரிகையாளர் சந்திப்பில் தன் அணியைச் சேர்ந்த எமான் சவான், சாரா அல்மௌரி மற்றும் தாக்வா ஹமோரி ஆகியோருடன் கலந்துகொண்டார் ராண்டா. சவானுக்கு 15 வயது. அல்மௌரி, ஹமோரி இருவருக்கும் 16 வயது. இவர்கள் அனைவரின் பயணமுமே மிகவும் சுவாரஸ்யமானது. இவர்கள் அனைவருக்கும் இதுதான் முதல் செஸ் ஒலிம்பியாட்.

பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு ஒற்றை அரபிக் வார்த்தைகளில் ராண்டா செடர் பதில் கொடுக்க, அவற்றை மொழி பெயர்த்தார் சவான். "அவர் தன் ஐந்தாவது வயதில் செஸ் விளையாடத் தொடங்கினார். அவர் தந்தை தான் அவருக்கு இந்த விளையாட்டை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

அப்போது அவருக்கு செஸ் பிடித்துவிட்டது" என்று ராண்டாவின் தொடக்கம் பற்றிக் கூறினார் சவான். "செஸ் போர்டு விளம்பரங்களுக்கு போஸ் கொடுக்க நாற்காலியின் மீது முட்டி போட்டு தான் ராண்டா அமர வேண்டி இருந்தது" என்று சொல்லி சிரித்தார் சவான்.

“இதுதான் என் ஆசை.. 8 வயதில் சதுரங்கத்தில் அசத்தும் பாலஸ்தீன சிறுமி” : யார் இந்த ராண்டா செடர் ?

இந்த உரையாடலின் போது அந்த நான்கு வீராங்கானைகளுக்குள்ளும் இருக்கும் நட்பு நன்றாக வெளிப்பட்டது. அவர்கள் ஆட்டத்தில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், ராண்டா என்ன செய்கிறார் என்று கவனிப்பதுமே மற்ற மூவருக்கும் இன்னொரு பொறுப்பாக அமைந்திருக்கிறது. "ராண்டாவை பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதில் நாங்கள் கூடுதல் பொறுப்பை உணர்கிறோம். அவர் எப்போதும் எங்களுடன் தான் இருப்பார்" என்று மூவரும் ஒரே சேர கூறினார்கள்.

“இதுதான் என் ஆசை.. 8 வயதில் சதுரங்கத்தில் அசத்தும் பாலஸ்தீன சிறுமி” : யார் இந்த ராண்டா செடர் ?

சிறுமியாக இருந்தாலும் செஸ் அரங்கில் பட்டையைக் கிளப்புகிறார் ராண்டா செடர். பாலஸ்தீன பெண்கள் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றார் ராண்டா. அவர் வயதுப் பிரிவில் உலகின் மிகச் சிறந்த வீரர்களுள் ஒருவர் அவர்.

"ராண்டாவின் சகோதரர் முகமது செடெரும் ஒரு செஸ் வீரர் தான். 13 வயதிலேயே அவர் FIDE மாஸ்டர் பட்டம் வென்றவர். அவர் இப்போது பாலஸ்தீன ஆண்கள் அணிக்கு விளையாடி வருகிறார். அவர் ராண்டாவுக்கு சில மூவ்கள் கற்றுக்கொடுத்தார். ராண்டாவின் தந்தை தான் பாலஸ்தீன அணியின் கேப்டன்" என்று ராண்டாவின் குடும்பத்திலேயே செஸ் இருப்பதைப் பற்றிக் கூறியிருக்கிறார் சவான்.

“இதுதான் என் ஆசை.. 8 வயதில் சதுரங்கத்தில் அசத்தும் பாலஸ்தீன சிறுமி” : யார் இந்த ராண்டா செடர் ?

"இங்கு இருப்பவர்களிலேயே இளம் வீரராக இருப்பது ராண்டாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் இங்கு இருப்பதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறார். பிரபலமாக இருப்பதை அவர் மிகவும் விரும்புகிறார்" என்று கூறுகிறார் அல்மோரி.

"பாலஸ்தீனத்தில் இருக்கும் சூழ்நிலையில், இங்கு வருவது மிகவும் சாதாரன விஷயமாக இருக்கவில்லை. அங்கிருந்து ஜோர்டன், அதன்பிறகு பஹ்ரைன் சென்று அதன்பிறகு தான் இந்தியா வந்தோம். பாலஸ்தீனத்தில் எங்களுக்கு அதிக தொடர்களும் இல்லை. எதிர்காலத்தில் எங்கள் நாட்டிலிருந்து நிறைய கிராண்ட் மாஸ்டர்கள் உருவெடுப்பார்கள் என்று நம்புகிறோம். நாங்கள் நால்வரும் எதிர்கால சாம்பியன்களாக இருக்கவேண்டும் என்பதே என் ஆசை" என்று கூறியிருக்கிறார் ஹமோரி.

banner

Related Stories

Related Stories