44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர் சென்னை மாமல்லபுரத்தில், நேற்று (ஜூலை 28) தொடங்கி வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த போட்டி தொடரில், 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி போட்டியின் முதல் சுற்று இன்று பகல் 3 மணியளவில் தொடங்கியது. இன்றைய போட்டியில் இந்திய அணியின் A பிரிவு ஜிம்பாப்வே அணியுடன் பலப்பரீட்சை காண்கிறது.
மேலும் இந்திய அணியின் B பிரிவு ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதுகிறது. அதோடு இந்திய அணியின் C பிரிவு சூடானை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் பி பிரிவில் விளையாடி ரோனக் சத்வானி ஐக்கிய அரபு அமீரக வீரனை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார்.
இதையடுத்து மகளிர் ஏ பிரிவில் விளையாடிய தமிழ்நாட்டு வீராங்கனை வைஷாலி தஜிகிஸ்தான் வீராங்கனை அப்ரோரோவா சப்ரியாவை வீழ்த்தி வெற்றி பெற்றார். அதேபோல், ஆண்கள் சி பிரிவில் விளையாடிய தமிழ்நாடு வீரர் கார்த்திகேயன் முரளி தெற்கு சூடான் அணி வீரர் அஜேக்கை வீழ்த்தி வெற்றி பெற்றார்
தனது முதல் அறிமுக செஸ் ஒலிம்பியாட் போட்டியிலேயே வெற்றி பெற்று அசத்தியுள்ளார் தமிழ்நாட்டு வீரர் குகேஷ். இந்திய அணி சி பிரிவில் மட்டும் 3 வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.