44-வது போட்டி செஸ் ஒலிம்பியாட்டின், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட். 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் இந்த போட்டியில், உலகம் முழுவதும் 190 நாடுகளில் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்க வரும் வீரர்கள், வீராங்கனைகள் தங்குவதற்காக சென்னை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் ஓட்டல்கள், விடுதிகளை தமிழக அரசு எடுத்துள்ளது. மேலும் எங்கு திரும்பினாலும், இந்த போட்டியின் லோகோவான வேட்டி-சட்டையுடன் கூடிய செஸ் விளையாட்டில் பயன்படுத்தும் குதிரை காய் வணக்கம் தெரிவிப்பதுபோல, தம்பி சின்னங்கள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதன் தொடக்கவிழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தொடக்கத்தில், இந்தியா பன்முகத்தன்மை கொண்டது என்பதை நிரூபிக்கும் வகையில், நாட்டின் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த நடனக்கலைஞர்கள் பாரம்பரிய நடனத்தை நடமாடி போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழர்களின் பாரம்பரிய உடையான பட்டுவேட்டி அணிந்து கலந்துக் கொண்டுள்ளார். மேலும் நடிகர் ரஜினிகாந், கர்த்தி, ஐஸ்வரியா ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டுள்ள 186 நாட்டு வீரர்களும், தங்கள் நாட்டுத் தேசியக் கொடிகளைக் கையில் ஏந்திக் கொண்டு கம்பீரமாக வளம் வந்தனர்.
இந்திய அணி வீரர்கள் மூவர்ணக்கொடியுடன் வந்தபோது அரங்கிலிருந்த அனைவரும் கைதட்டி அவர்களை வரவேற்றனர். அதேபோல் நாட்டின் பன்முகத்தன்மையை எதிரொலிக்கும் நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றுவருகிறது.
தொடக்கவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தமிழ், தமிழர் பெருமை குறித்த வரலாற்றை விளக்கும் 3D நிகழ்ச்சியில், தமிழ் மொழி, தமிழர்களின் தொன்மை, பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
பழந்தமிழர் வாழ்வுமுறை, மயிலாடும் பாறை, கடல் பயணம், வாணிபம், சோழ-பாண்டிய-சேர பேரரசுகள், கீழடி நாகரீகம், சிலம்பம், ஏறு தழுவுதல், பரதாநாட்டியம், நாட்டுப்புறகலைகள், மாமல்லபுரம், தமிழ்ச்சங்கம், இலக்கியம், திருக்குறள் என 22 நிமிடங்கள் நீண்ட கலைநிகழ்ச்சி மூலமாக தமிழ் பெருமை குறித்து உலகிற்கே பாடம் எடுத்தது தமிழக அரசு.
மேலும் நடிகர் கமலஹாசன் குரலில் உருவான இந்த நிகழ்ச்சியை பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். மேலும், “தமிழன்டா ! எந்நாளும் !
சொன்னாலே திமிர் ஏறும் !
ஏறு தழுவுதல் - This Sport is not Man Vs Animal But, Man and Animal in Harmony.
We Were INDUSTRIOUS, Even before it Was a Word in the West.
When the sea was still a Stranger, The Shores became our Friends.
This start, This community, This Tamil built the Culture and Society of Yesterday and Today.
யாதும் ஊரே ! யாவரும் கேளிர் !
This is Our World; and these are Our People.” போன்ற வாசங்கள் கூடியிருந்தவர்கள் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
190 நாடுகளில் இருந்து வந்த நாட்டு மக்களுக்கு தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “விளம்பரங்களில் பிரதமர் படம் கேட்டவர்களுக்கு தமிழர் பெருமை போற்றும் சிறப்பான படம் போட்டு காண்பித்துள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பலரும் 2022 குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு 10 நிமிடம் நேரம் கிடைக்கவில்லை. ஆனால் இந்த போட்டியால் தமிழ் நாட்டின் கலாச்சாரத்தை 187 நாடுகளுக்கு கொண்டு சேர்க்க வாய்ப்பாக அமைந்தது என கருத்துத் தெரிவித்துள்ளனர்.