மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு மரியாதை செலுத்தும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் தற்போது பிரம்மாண்ட நினைவிடம் அமைக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதன் மாதிரி படத்தை முதல்வர் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில், உதயசூரியன் வடிவில் கருணாநிதி நினைவிடமும், பிரம்மாண்டமான பேனா வடிவிலான தூணும் இடம்பெற்றுள்ளன.
இந்த பணிகள் நடந்து கொண்டிருக்க கூடிய நிலையில், நடுக்கடலில் 80 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட பேனா வடிவம் ஒன்றை 134 அடி உயரத்திற்கு அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த தகவல் வெளியானதும் அ.தி.மு.க. பா.ஜ.க போன்ற கட்சிகளை சேர்ந்தவர்கள் இந்த திட்டத்தை கடுமையாக விமர்சித்து வந்தனர். இது குறித்த கேள்விக்கு "இத்திட்டத்தை எதிர்ப்பது
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு செய்யும் துரோகம்" என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், கலைஞரின் பேனா குறித்து விமர்சித்தவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி NVN சோமு முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில், "அவ்வளவு பெரிய பேனாவுக்கு இன்க் போடுவாங்களா???? என்று கேட்கும் சில அறிவுஜிவிகளுக்கு ஒரு பதில்!
அந்த பேனாவில் வந்த இன்க் வாயிலாகதான் இத்தனை ஆண்டுகள் தமிழ்நாட்டில் சிலரால் கதற மட்டும் முடிகிறது!!! " என கூறி பதிலடி கொடுத்துள்ளார்.