சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:-
நேற்றைய தீர்ப்பு ஓ.பி.எஸ் -க்கு பின்னடைவு இல்லை. நாங்கள் உச்ச நீதிமன்றம் செல்ல இருக்கிறோம். அ.தி.மு.க கட்சி அலுவலகத்திற்குச் செல்வதற்கு ஓ.பி.எஸ்யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்.
நீதிமன்றம் மட்டுமல்ல மக்கள் மன்றமே எங்கள் பின்னால் நிற்கிறது. அங்கு சந்திப்போம். ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அனைத்து அக்கிரமத்துக்கும் காரணம் தலைமை கழக மேலாளர் மகாலிங்கம்தான் பொறுப்பு. போலிஸார் மட்டும் அங்கு இல்லாமல் இருந்திருந்தால் சில கொலைகள் நிகழ்ந்திருக்கும்.
அனைத்து முன்னால் அமைச்சர்கள் மீதும் ரெய்டு நடைபெற்று வருகிறது இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சிறையிலிருந்து கட்சியை நடத்துவாரா? .
முதலமைச்சரை மு.க.ஸ்டாலின் பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் கிடையாது. முதலமைச்சர் கொரோனா தொற்றிலிருந்த போது கூட கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி சம்பவத்திற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடவடிக்கைக்கு எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார்?. நடப்பது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி. யாரும் தப்ப முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.