தமிழ்நாடு

“பேரறிஞர் அண்ணா கலந்துக்கொண்ட தென் எல்லை போராட்ட வரலாறு..” : ஊடகவியலாளர் ப.திருமாவேலன் சிறப்புக் கட்டுரை!

கொச்சியில் வாழும் 15 லட்சம் தமிழ் மக்கள் மொழி அடிப்படையில் தாய்த்தமிழகத்தோடு சேரவேண்டும் என்ற கிளர்ச்சியை இம்மாநாடு வரவேற்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“பேரறிஞர் அண்ணா கலந்துக்கொண்ட தென் எல்லை போராட்ட வரலாறு..” : ஊடகவியலாளர் ப.திருமாவேலன் சிறப்புக் கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அண்ணாவின் அகண்ட தமிழகம்!

இதேபோல் தெற்கு எல்லை குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “தமிழகத்தின் தெற்குப் பகுதியில் தமிழகத்தோடு ஒட்டி திருவிதாங்கூர் - கொச்சி மாநிலத்தில் இருக்கும் நாஞ்சில் பகுதியும், பிற தமிழ்ப்பகுதிகளும் தமிழகத்தோடு இணையவேண்டும் என்ற கருத்தை நாஞ்சில் மாவட்ட முதல் தி.மு.கழக மாநாட்டிலும் திராவிட முன்னேற்றக் கழக முதல் சென்னை மாநில மாநாட்டுத் தீர்மானத்திலும் வலியுறுத்திச் சொல்லப்பட்டது.

இதைத் தொடர்ந்து சித்தூர் மாவட்ட மாநாடு 1954 ஜூலை 10,11 ஆகிய நாட்களில் பொதட்டூர்பேட்டையில் நடந்தது. ஆந்திர மாநிலத்தோடு இணைக்கப்பட்ட தமிழ்ப் பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க இம்மாநாடு வலியுறுத்தியது. இம்மாநாட்டில் பேசிய பேரறிஞர் அண்ணா அவர்கள், “சித்தூரை ஆந்திராவில் இருந்து மீட்டு தமிழகத்தோடு சேர்க்க வேண்டியது மகத்தான வேலை.

அதேபோல் நாஞ்சில் பகுதிகள் கொச்சியில் இருந்து பிரித்து தமிழகத்தோடு சேர்க்க வேண்டும். புதுவையிலே பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருக்கும் தமிழர்களை திராவிடத்துடன் இணைக்க வேண்டும். இந்த நாட்டிலே பிறந்து வாழ வழியின்றி கடல் கடந்து வயிறு வளர்க்கச் சென்றவர்களில் இலங்கையிலே வாழுகின்ற இலட்சக்கணக்கான திராவிடரின் உரிமை காக்க பணிபுரிய வேண்டும்” என்று அனைத்தையும் வரிசைப்படுத்தினார்கள். சித்தூர் பிரச்சினைக்காக மத்தியில்

“பேரறிஞர் அண்ணா கலந்துக்கொண்ட தென் எல்லை போராட்ட வரலாறு..” : ஊடகவியலாளர் ப.திருமாவேலன் சிறப்புக் கட்டுரை!

ஆளும் நேருவையோ, மாநிலத்தை ஆளும் காமராசரையோ எதிர்த்து போராடத் தேவையில்லை, ஆந்திர முதலமைச்சர் பிரகாசத்தை எதிர்த்து போராட வேண்டும் என்று தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. சொல்லி இருந்ததை அண்ணா கண்டித்தார். சித்தூரை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று கே.ஏ.மதியழகன், நாகர் கோவில் வி.எம்.ஜான், சித்தூர் என்.கேசவன் ஆகியோர் முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதே மாநாட்டில் தெற்கு எல்லை தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திரு-கொச்சியில் வாழும் 15 லட்சம் தமிழ் மக்கள் மொழி அடிப்படையில் தாய்த்தமிழகத்தோடு சேரவேண்டும் என்ற கிளர்ச்சியை இம்மாநாடு வரவேற்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதே கோரிக்கையை வலியுறுத்தி போராடியவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதை இம்மாநாடு கண்டித்தது. இந்த தீர்மானத்தை நாகர் கோவில் வி.எம்.ஜான், அ.பொன்னம் பலம் ஆகியோர் முன்மொழிந்தார்கள்.

தென் எல்லையில் தி.மு.க.!

ஜூலை 23 தென் எல்லை போராட்டத்தில் கலந்து கொள்ள பேரறிஞர் அண்ணாவும் கே.ஏ. மதியழகனும் நாகர்கோவில் வந்தார்கள். நாகர்கோவில் நீதிமன்றம் முன் நடந்த மறியலில் 600 பேர் கைது செய்யப்பட்டார்கள். நாகர் கோவில் நகர தி.மு.க. செயலாளர் வி.எம்.ஜான் இப்போராட்டம் தொடர்பாக அனைத்து முடிவுகளும் எடுக்க அதிகாரம் கொடுத்தார் அண்ணா. அவர் வெளியிட்ட அறிக்கை தென் எல்லைப்பிரச்சினையினை முழுமையாக விளக்குவதாக அமைந்திருந்தது. நாகர் கோவில் வந்த அண்ணா, திருவிதாங்கூர் போராட்டத்தலைவர்கள் அனைவரையும் சந்தித்தார்.

“பேரறிஞர் அண்ணா கலந்துக்கொண்ட தென் எல்லை போராட்ட வரலாறு..” : ஊடகவியலாளர் ப.திருமாவேலன் சிறப்புக் கட்டுரை!

இது தொடர்பாக நடந்த பொதுக்கூட்டங்கள் அனைத்திலும் மதியழகன் கலந்து கொண்டு பேசினார். நாகர்கோவில், செங்கோட்டை ஆகிய ஊர்களில் மறியல் போராட்டம் திமுக சார்பில் 6.8.1954 அன்று நடந்தது. தமிழ் வாழ்க, நாஞ்சில் நாடு தமிழருக்கே, மத்திய அரசே நியாயம் வழங்கு என்று இவர்கள் முழக்கமிட்டனர். பத்து பத்து பேராக கைதானார்கள். நாகர்கோவிலில் 79 பேரும், செங்கோட்டையில் 31 பேரும் கைது செய்யப்பட்டனர். முன்னதாக பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைதாகி சிறையில் இருந் தார்கள். மொத்தம் 919 பேர் சிறை வைக்கப்பட்டார்கள்.

இதன் தொடர்ச்சியாக தென் திருவிதாங் கூரில் நடந்த அனைத்து போராட்டங்களிலும் திமுகவினர் கலந்து கொண்டனர். ஆகஸ்ட் 11 அன்று நடந்த மாபெரும் போராட்டத்தைக் கலைக்க துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை 11 பேரை சுட்டுக்கொன்றது. ஆகஸ்ட் 15 அன்று தி.மு.க.வினர் நடத்திய போராட்டம் காரணமாக குழித்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தி.மு.க. செயலாளர் ஜான் உள்ளிட்ட 19 பேர் மீது வழக்கு நடந்தது. ஆகஸ்ட் 11 துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அக்டோபர் 22 ஆம் நாள் பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதில் தி.மு.க. பங்கெடுத்தது.

banner

Related Stories

Related Stories