தமிழ்நாடு

காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண்.. சுற்றுலா வந்த இடத்தில் நடந்த துயரம்!

ஆந்திராவில் இருந்து சுற்றுலா வந்த இளம் பெண் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட  பெண்.. சுற்றுலா வந்த இடத்தில் நடந்த துயரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்தவர் கட்டா வினிதா சவுத்ரி (26). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் வினிதா தன்னுடன் பணியாற்றும் 9 நண்பர்களுடன் சேர்ந்து உதகைக்குச் சுற்றுலா வந்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை இவர்களைச் சட்டவிரோதமாக கல்லட்டி ஆற்றிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட  பெண்.. சுற்றுலா வந்த இடத்தில் நடந்த துயரம்!

அப்போது திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அப்போது காட்டாற்று வெள்ளத்தில் வினிதா அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதைப்பார்த்த அரவது நண்பர்கள் அதிர்ச்சியடைந்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட  பெண்.. சுற்றுலா வந்த இடத்தில் நடந்த துயரம்!

பிறகு அங்கு வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று முழுவதும் மீட்புப் பணி நடைபெற்று வந்த நிலையில் அவரது உடலை போலிஸார் இன்று மீட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories