விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைத் தலைமை இடமாகக் கொண்டு எஸ்.பி.கே கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது இந்த எஸ்.பி.கே நிறுவனம்தான் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஒப்பந்தப் பணி பெற்றது.
மேலும், அ.தி.மு.க அரசியின் போது, எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி மற்றும் அவரது மகன்களுடன் இணைந்து நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தம் எடுத்துப் பணி செய்து வந்தது.
இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணிகளில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதா என்பது குறித்து எஸ்.பி.கே அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், தற்போது அ.தி.மு.க ஒற்றை தலைமை குறித்து எடப்பாடிக்கு ஆதரவாகச் செயல்படுவதற்காக நிர்வாகிகளுக்குப் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக எழுந்து சர்ச்சை குறித்தும் சோதனை நடைபெறுகிறது.
அதேபோல், இன்று அ.தி.மு. முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு நெருங்கிய உறவினரான சந்திரசேகர் வீடு மற்றும் பி.என்.புதூரில் உள்ள அவரது தந்தை வீடு உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேலையில் எஸ்.பி. கே நிறுவனத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.