தமிழ்நாடு

உலக புகழ்பெற்ற தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் : 90s kids பொழுதுபோக்கு.. அழிவின் விளிம்பில் சர்க்கஸ் கலை !

கண்ணுக்கு விருந்து படைக்கும் சர்க்கஸ் துறையை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற சர்க்கஸ் துறையினரின் எதிர்பார்ப்பு நனவாகுமா?

உலக புகழ்பெற்ற தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் : 90s kids பொழுதுபோக்கு.. அழிவின் விளிம்பில் சர்க்கஸ் கலை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

காலம் காலமாக மக்களை மகிழ்விக்கும் ஒரு சிறந்த பொழுதுபோக்கு நிகழ்வாக சர்க்கஸ் அமைந்து வந்தது. மிருககாட்சி சாலைகள் உள்ள ஊர்களைத் தவிர, மற்ற ஊர்களில் சாதாரண பாமர மக்கள், காட்டில் வாழும் அரிய விலங்குகளை பார்க்க முடியாது. அது மட்டுமல்லாமல், மிருகக்காட்சி சாலைகளில் மிருகங்களை பார்க்கத் தான் முடியுமே தவிர, அதன் சாகசச் செயல்கள் எதையும் பார்க்க முடியாது. அதை சர்க்கசில் தான் பார்க்க முடியும்.

விலங்குகள் வித்தை காட்டும் காட்சிகளை அமைக்கும் சர்க்கஸ் என்ற கேளிக்கை நிகழ்ச்சி பிரான்சு நாட்டில் 1782–ம் ஆண்டு உருவானது. அதை உருவாக்கியவர் பிலிப் ஆஸ்ட்டிலே என்ற ராணுவ அதிகாரியாவார்.  பாரீஸ் நகரில் அவர் தொடங்கிய முதல் சர்க்கஸ் நிறுவனத்தின் பெயர் ‘ஆம்பிதியேட்டர் அங்லாய்ஸ்’. இந்தியாவில் முதல் சர்க்கஸ் 1880–ம் ஆண்டு தொடங்கியது.

உலக புகழ்பெற்ற தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் : 90s kids பொழுதுபோக்கு.. அழிவின் விளிம்பில் சர்க்கஸ் கலை !

இதை மராட்டிய மாநிலத்தில் சோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த குர்துவாடி சமஸ்தான ராஜாவின் குதிரை லாயத்தில் தலைமை பொறுப்பில் இருந்த விஷ்ணுபந்த் சாத்ரே என்பவர் தொடங்கினார். அவரும், அவரது மனைவியும் சேர்ந்து 1980–ம் ஆண்டு கிரேட் இந்தியன் சர்க்கஸ் என்ற சர்க்கசை முதன்முதலாக தொடங்கினார்கள்.

அந்த சர்க்கஸ் கேரளாவில் உள்ள தலைச்சேரிக்கு சென்றபோது, அங்கு தற்காப்புக் கலைகளை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் கிளெரி குஞ்ஞி கண்ணன் என்பவரை சந்தித்து, தன் சர்க்கசில் உள்ள ஆட்டக்காரர்களுக்கு பயிற்சி அளிக்கச் சொன்னார். அதன் தொடர்ச்சியாகத்தான் 1901–ம் ஆண்டு குன்னிகண்ணன் கொல்லம் அருகே சிரக்காரா என்ற ஊரில் சர்க்கஸ் பள்ளிக்கூடத்தை தொடங்கி, இந்தியாவில் இன்று இந்திய சர்க்கஸ்களுக்கெல்லாம் பிதாமகனாக அழைக்கப்படுகிறார்.

உலக புகழ்பெற்ற தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் : 90s kids பொழுதுபோக்கு.. அழிவின் விளிம்பில் சர்க்கஸ் கலை !

நன்றாக வளர்ந்து கொண்டிருந்த சர்க்கஸ் தொழில், கடந்த 2011–ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டப்படி சர்க்கசில் சிங்கம், புலி, சிறுத்தை, சிம்பன்சி, குரங்கு, கரடி, காளைமாடுகள் போன்றவை தடை செய்யப்பட்டது. அதிலேயே சர்க்கஸ் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு சின்னச்சின்ன சர்க்கஸ் கம்பெனிகளெல்லாம் மூடப்பட்டன. இளம் மனது புத்துணர்ச்சி பெறவும், மேம்படவும் சர்க்கஸ் போன்ற நிகழ்ச்சிகள் பெரிதும் உதவும். தொய்வுற்ற மனங்களை இழுத்துக் கட்டும் சாதனமாக இருந்தது சர்க்கஸ்.

எனவே, சர்க்கஸ் தொழில் நலிந்துவிடாமல் காப்பாற்ற வேண்டிய கடமையில் இருக்கும் ஒன்றிய அரசு சர்க்கஸ் துறையை தனிக்கவனம் செலுத்தி மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்க்கஸ் கம்பெனிகள் காணப்பட்ட நிலையில், இன்று விரல்விட்டு எண்ணும் அளவுக்கு ஒரு சில கம்பெனிகள் மட்டுமே உள்ளதாக சர்க்கஸ் துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

உலக புகழ்பெற்ற தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் : 90s kids பொழுதுபோக்கு.. அழிவின் விளிம்பில் சர்க்கஸ் கலை !

பண்டைய காலங்களில் நேரு, இந்திரா காந்தி போன்ற பிரதமர்கள் இருந்தபோது இந்த துறைக்கு அளித்த முக்கியத்துவமும் உதவியும் இன்றைய மத்திய அரசு தரவில்லை என்ற குற்றச்சாட்டும் சர்க்கஸ் துறையினரால் முன்வைக்கப்படுகிறது.

ஏற்கனவே, விலங்குகள் இல்லாததால் உற்சாகம் குறைந்துவிட்ட இந்த துறையை மீண்டும் மேம்படுத்த, ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட சாகச வீரர்களை நினைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தாலும் கடந்த காலங்கள் போல மக்களிடையே வரவேற்பும் அரசுகளின் உதவியும் குறைந்துவிட்டதால் இளைய தலைமுறை இந்தத் துறைக்கு வர மறுப்பதாகவும் இந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

உலக புகழ்பெற்ற தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் : 90s kids பொழுதுபோக்கு.. அழிவின் விளிம்பில் சர்க்கஸ் கலை !

நம் கண்முன்னே நம்மால் எளிதில் செய்ய முடியாத சாகசங்களையும் அரிய பல பொழுதுபோக்கு அம்சங்களையும் கண்ணுக்கு விருந்து படைக்கும் சர்க்கஸ் துறையை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற சர்க்கஸ் துறையினரின் எதிர்பார்ப்பு நனவாகுமா?

banner

Related Stories

Related Stories