தமிழ்நாடு

உதய்பூர் படுகொலை - ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!

உதய்பூரில் நடந்த கொடூரமான கொலை அதிர்ச்சி அளிக்கிறது. மதத்தின் பெயரால் நடக்கும் கொடூரக் கொலைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உதய்பூர் படுகொலை - ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ராஜன்தான் மாநிலம் உதய்பூர் நகரில் மால்தாஸ் பகுதி உள்ளது. இந்த பகுதியில் கன்னையா லால் என்பவர் தையல் கடை ஒன்றை நடித்து வருகிறார். இவரின் கடைக்கு வாடிக்கையாளர்கள் வந்த நபர்கள் இரண்டு பேர், கன்னையா லாலிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே அவரை கத்தியால் கடுமையாக தாக்கியுள்ளனர்.

மேலும் அவரை வெளியே இழுத்துச் சென்று பொதுவெளியில் வைத்து அவரது தலையைத் துண்டித்துள்ளனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து அவரே சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உதய்பூர் படுகொலை - ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!

இந்நிலையில் போலிஸார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கன்னையா லாலை படுகொலை செய்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ரியாஸ் மற்றும் கவுஸ் முகமது இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதில் பா.ஜ.க நிர்வாகி நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்டதாலும், முகமது நபிகள் குறித்து அவதூறாக பேசியதால் அவரை கொலை செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

உதய்பூர் படுகொலை - ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!

இதனிடையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், உதய்பூரில் கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் அங்கு இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “உதய்பூரில் நடந்த கொடூரமான கொலை அதிர்ச்சி அளிக்கிறது. மதத்தின் பெயரால் நடக்கும் கொடூரக் கொலைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. வெறுப்பை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தோற்கடித்தே ஆக வேண்டும். அமைதியையும், சமாதானத்தையும் அனைவரும் காக்கவேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மேலும் அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் கூறுகையில், “உதய்பூரில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இது ஒரு சோகமான சம்பவம். தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். அதுவரை மாநில மக்கள் அமைதி காக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories