தமிழ்நாடு

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. ஓட்டுநர் கூறிய காரணத்தை கேட்டு அதிர்ந்த போலிஸார்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் - பழநி மலைப்பகுதியில், ஒருவர் காருடன் 100 அடி பள்ளத்தாக்கில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. ஓட்டுநர் கூறிய காரணத்தை கேட்டு அதிர்ந்த போலிஸார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

புல்லூர் எஸ்டேட் அருகே 100 அடி பள்ளத்தாக்கில் அடையாளம் தெரியாத கார் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடன் 108 ஆம்புலன்ஸயும் அழைத்து வந்தனர். அங்கு வந்த அவர்கள், அந்த காரை மீட்கையில் காரில் பயணித்த நபர் ஒருவர் லேசான காயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் இருந்தார். இதையடுத்து நூலிழையில் உயிர்பிழைத்த அந்த நபரை காவல்துறையினர் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. ஓட்டுநர் கூறிய காரணத்தை கேட்டு அதிர்ந்த போலிஸார்!

இதைத்தொடர்ந்து அவரிடம் நடைபெற்ற விசாரணையில், அவர் தஞ்சாவூரை சேர்ந்த அன்பரசன் என்றும், அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் தான் குடும்ப பிரச்னை காரணமாக 100 அடி பள்ளத்தாக்கில் இருந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்தார்.

இவரளித்த வாக்குமூலத்தின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories