தமிழ்நாடு

“பங்களாதேஷில் மெடிக்கல் சீட்” : ஆசைக் காட்டி லட்சக்கணக்கில் மோசடி - அதிரடி நடவடிக்கை எடுத்த போலிஸ்!

பங்ளாதேசில் மருத்துவ படிப்பிற்கு இடம் வாங்கித் தருவதாகக் கூறி கரூரில் ரூ 4.70 லட்சம் மோசடி செய்த கல்வி டிரஸ்ட் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

“பங்களாதேஷில் மெடிக்கல் சீட்” : ஆசைக் காட்டி லட்சக்கணக்கில் மோசடி - அதிரடி நடவடிக்கை எடுத்த போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கரூர் நரிகட்டியரிலுள்ள தமிழ்நாடு அரசு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் பேபி சித்ரா (60). இவரது மகள் ரசிகா. இவர் 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று, நீட் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுர்க்கம் மற்றும் மதுரையில் கல்வி டிரஸ்ட் நடத்தி வருபவர் ரகுநாதபாண்டியன் (43). இந்நிலையில் பங்ளாதேசில் மருத்துவ படிப்பிற்கு இடம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ 4.70 லட்சம் மோசடி செய்த பேபி சித்ரா கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலிஸில் புகார் அளித்திருந்தார்.

NEET
NEET

அந்த புகாரில், காயத்ரி என்பவர் பேபி சித்ராவின் செல்போனுக்கு தொடர்புகொண்டு எம்.பி.பி.எஸ் படிப்பில் ரசிகாவை சேர்க்குமாறு கூறியுள்ளார். பங்களாதேஷில் உள்ள எம்.பி.பி.எஸ் கல்லூரியில் சேர்ப்பது தொடர்பான அங்கீகாரக் கடிதம் ஒன்றையும் கூறி வலைதளம் மூலம் அனுப்பிருக்கிறார் ரகுநாதபாண்டியன்.

மேலும் அவரது டிரஸ்ட்டிலிருந்து பேபி சித்ராவிடம் அடிக்கடி செல்போனில் பேசிய ரகுநாதபாண்டியன், ரசிகாவின் சான்றிதழ்கள், பாஸ்போர்ட், ரூ.7 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டு, பேபி சித்ராவின் கணவர் ரகுநாதபாண்டியனின் வங்கிக் கணக்கிற்கு ரூ 4 லட்சத்து 70 ஆயிரம் அனுப்பியுள்ளார்.

“பங்களாதேஷில் மெடிக்கல் சீட்” : ஆசைக் காட்டி லட்சக்கணக்கில் மோசடி - அதிரடி நடவடிக்கை எடுத்த போலிஸ்!

அதன்பிறகு ரகுநாதபாண்டியனை தொடர்பு கொண்டபோது எந்தவித பதிலும் இல்லை என்பதால் பின்னர் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்திருக்கிறார் எனத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலிஸ் சப் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். ரகுநாத பாண்டியன் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories