தமிழ்நாடு

வாட்டர் பாட்டில் அடி.. முதுகில் குத்து.. டயர் பஞ்சர் : கூட்டத்தில் வைத்து OPS-ஐ தாக்கிய கும்பல்

பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறிய ஓ.பி.எஸ் மீது இ.பி.எஸ் ஆதரவாளர்கள் தண்ணீர் பாட்டிகளை கொண்டு எறிந்துள்ளனர்.

வாட்டர் பாட்டில் அடி.. முதுகில் குத்து.. டயர் பஞ்சர் : கூட்டத்தில் வைத்து OPS-ஐ தாக்கிய கும்பல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பெரும் பரபரப்புக்கு இடையே இன்று அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. அப்போது மேடைக்கு வந்த ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், ஜெ.சி.பி. பிரபாகரன் ஆகியோருக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஜெ.சி.பி. பிரபாகரன் மேடையில் இருந்து கீழே இறங்கினார்.

இதன் பின்னரே எந்த கட்சியிலும் நடக்காத உச்சபட்ச காட்சிகள் அங்கு நடந்தேறியது. இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் என இரண்டு தரப்பு ஆதரவாளர்களாலும் முன்வைக்கப்பட்ட 23 தீர்மானங்கள் அங்கு நிறைவேற்றுவதற்காக முன்வைக்கப்பட்டன.

இதனை அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் முன்வைத்து நிறைவேற்றி தரவேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் 23 தீர்மானங்களும் பொதுக்குழுவால் நிராகரிக்கப்பட்டதாக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்தார். மேலும் ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டுவரப்பட்ட பின்னர் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் எனவும் அறிவித்தார்.

வாட்டர் பாட்டில் அடி.. முதுகில் குத்து.. டயர் பஞ்சர் : கூட்டத்தில் வைத்து OPS-ஐ தாக்கிய கும்பல்

இதன் பின்னர் தற்காலிக அவைத் தலைவராக இருந்த தமிழ் மகன் உசேன் முறைப்படி அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமை குறித்து அளித்த கடிதத்தை அவர் மேடையில் வாசித்தார்.

பின்னர் பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று ஜூலை 11-தேதிக்கு பொதுக்குழு ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார்.

இதனிடையே ஓ.பி.எஸ் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழு என முழக்கமிட்டு பொதுக்குழுவில் இருந்து வெளியேறினர். அப்போது ஜூலை 11-தேதி அறிவிக்கப்பட்ட பொதுக்குழு அறிவிப்பு செல்லாது எனவும், அதிமுகவை அழிவு பாதைக்கு கொண்டு செல்கிறார்கள் எனவும் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அதிமுக தொண்டர்கள் சிலர் 23 தீர்மானங்களில் நகல்கள் கிழித்து ஓ.பி.எஸ் மீது தூக்கி எறிந்தனர். இதன் காரணமாக அதிமுக பொதுகுழுவில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

வாட்டர் பாட்டில் அடி.. முதுகில் குத்து.. டயர் பஞ்சர் : கூட்டத்தில் வைத்து OPS-ஐ தாக்கிய கும்பல்

இந்த நிலையில் கூட்டத்தில் இருந்து வெளியேறிய ஓ.பி.எஸ் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் மீது முதுகில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஓ.பி.எஸ் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசப்படும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு ஓ.பி.எஸின் காரும் இ.பி.எஸ் ஆதரவாளர்களால் பஞ்சர் செய்யப்பட்டது. இது குறித்து செய்தியாளர்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பியபோது அதை அவர் மறுத்து பேட்டியளித்தார்.

கட்சியின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட தலைவர் மீதே அக்கட்சியின் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிமுக பொதுக்குழுவில் நடந்தேறியுள்ள இந்த நிகழ்வுகள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories