தமிழ்நாடு

ஆழ்துளை கிணற்றில் விழுந்த நாய் குட்டி.. 5 மணி நேரத்தில் மீட்பு: தீயணைப்புத் துறைக்கு குவியும் பாராட்டு!

திருவாரூரில் ஆழ்ளை கிணற்றில் விழுந்த நாய் குட்டியை 5 மணி நேரத்தில் போராடி மீட்ட தீயணைப்பு வீரர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த நாய் குட்டி.. 5 மணி நேரத்தில்  மீட்பு: தீயணைப்புத் துறைக்கு குவியும் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவாரூர் மாவட்டம், குன்னியூர் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் தனது வீட்டின் பின்புறம் தண்ணீருக்காக ஆழ்துளை கிணற்றைத் தோண்டியுள்ளார். ஆனால், தண்ணீர் கிடைக்காததால் அதனை சரியாக மூடாமல் அப்படியே விட்டுள்ளார்.

இந்நிலையில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த குட்டி நாய் ஒன்று ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளது. பின்னர் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து சத்தம் ஒன்று வந்ததை அடுத்து மூர்த்தி எட்டிப்பார்த்துள்ளார். அப்போது, நாய் குட்டி ஒன்று ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து அலறிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

உடனே இது குறித்துத் தீயணைப்புத் துறைக்கு மூர்த்தி தெரிவித்துள்ளார். பிறகு அங்கு வந்த வீரர்கள் கயிறு மூலம் நாய் குட்டியை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் ஆழ்துளைக் கிணறு அருகே ஜே.சி.பி எந்திர உதவியுடன் குழி ஒன்றை தோண்டியுள்ளனர். பின்னர் இதன் வழியாக சென்று நாய்க் குட்டியை மீட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்கு பிறகே தீயணைப்பு வீரர்கள் போராடி நாய்க்குட்டியை மீட்டு வெளியே கொண்டு வந்துள்ளனர். இதையடுத்து நாய்க் குட்டியை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories