பா.ஜ.க தலைவைர் அண்ணாமலை கூறும் தகவல்கள் முற்றிலும் தவறானது வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, "பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் இரண்டு ஆண்டுகளாக சி.இ.ஓ பணி நிரப்பப்படவில்லை. டி.டி.சி.பி யில் 32% பணியிடங்களும், சி.எம்.டி.ஏ.வில் 37% காலி பணியிடங்களும் உள்ளன
காலிப்பணியிடங்கள் கடந்த ஆட்சியிலிருந்தே உள்ளதால் ஊழியர்களுக்கு பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் காலிப்பணியிடங்கள் நிரப்பும் பணி முடிவடையும்.பணியிடங்கள் நிரப்பப்பட்டதும் பணிகள் விரைந்து நடைபெறும்
சி.எம்.டி.ஏ-வில் சி.இ.ஓ பணியிடம் 1978-ஆம் ஆண்டிலிருந்தே உள்ளது - திடீரென உருவாக்கப்படவில்லை . அ.தி.மு.க ஆட்சியில் 2 வருடமாக சி.எம்.டி.ஏ. சி.இ.ஓ பணி நிரப்பப்படவில்லை. சி.இ.ஓ பணியிடம் புதிதாக உருவாக்கப்பட்டது போல குறை கூறுகிறார் அண்ணாமலை.
இதுவரை 46 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சி.இ.ஓ பணியில் இருந்துள்ளனர். விதிமுறைகளை பின்பற்றி அனுமதி அளிக்க கால அவகாசம் தேவைப்படும்
சிஎம்டிஏ-வில் அண்ணாமலையையே அமர வைத்தாலும் எட்டு நாளில் அனுமதி கிடைக்காது. கலைஞர் நினைவிடம், திருவாரூர் கலைஞர் அருங்காட்சியம் போன்ற இடங்களுக்கு சட்டத்திற்கு உட்பட்டுதான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆவணங்கள் முறையாக இணைக்கப்படாவிட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அடுத்த 2 மாதத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதும் பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு விரைவாக அனுமதி கிடைக்கும்.
அ.தி.மு.க ஆட்சியில் ஒற்றைச் சாளர அனுமதி முறையாக செயல்படுத்தப்படவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர்தான் ஒற்றைச் சாளர முறை கொண்டு வரும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.