தமிழ்நாடு

‘குறை கூறுபவர்களுக்கு குஜராத் நிலைபற்றி தெரியுமா?’ - அவதூறு கும்பலுக்கு அமைச்சர் ‘பளார்’ பதிலடி !

தமிழ்நாட்டை விட குஜராத்தில் நிலக்கரி கையிருப்பு குறைவாகவே உள்ளது. அதை மறந்து, மறைத்து எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன என்று கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

‘குறை கூறுபவர்களுக்கு குஜராத் நிலைபற்றி தெரியுமா?’ - அவதூறு கும்பலுக்கு அமைச்சர் ‘பளார்’ பதிலடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கரூர் மாவட்ட தி.மு.க செயற்குழுக் கூட்டம் கரூர் நகர பகுதியில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் கரூர் மாவட்ட பொறுப்பாளர், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழ்நாடு உட்பட ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலமாக சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலைகளில் அறிவிக்கப்பட்ட மின் தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளுக்கு சீரான மின் வினியோகம் கொடுக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் தவறான கருத்துகளை பேசி மக்களிடம் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் 6 முதல் 7 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது. ஆனால், அதை விட குறைவாகவே குஜராத்தில் நிலக்கரி கையிருப்பு உள்ளது.

நிலக்கரி கையிருப்பு குறித்து தமிழ்நாட்டை குறைகூறும் இயக்கங்கள் தான், ஆளக்கூடிய மாநிலங்களில் நிலக்கரி கையிருப்பு எவ்வளவு உள்ளது. அங்கெல்லாம் மின்வெட்டு எவ்வளவு நேரம் உள்ளது, மின் வினியோகம் எவ்வளவு நேரம் கொடுக்கப்பட்டு வருகிறது, என்பதை மறந்து மறைத்து பேசி வருகின்றனர். பொய் பிரச்சாரம் மக்களிடத்தில் எடுபடாது. தமிழகத்தில் தற்போது காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ள தன் காரணமாக, அனல் மின் நிலையங்களில் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories