தமிழ்நாடு

சிங்கார சென்னை 2.0 திட்டம் அழகுபடுத்துவது மட்டுமல்ல.. சாதி பெயர்களும் நீக்கம்: சென்னை மாநகராட்சி அதிரடி!

சென்னை தெருக்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் பணியை மாநகராட்சி துவக்கியுள்ளது.

சிங்கார சென்னை 2.0 திட்டம் அழகுபடுத்துவது மட்டுமல்ல.. சாதி பெயர்களும் நீக்கம்: சென்னை மாநகராட்சி அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை மாநகராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் இந்த தெருக்களின் பெயர்ப் பலகையை மாற்றியமைக்கச் சென்னை மாநகராட்சி முடிவு அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.

இந்த திட்டப்பணிக்காக ரூ.8.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக மாற்றியமைக்கப்படும் பெயர் பலகையில் சென்னை 2.0 திட்டத்தின் இலச்சினை, தெருவின் பெயர், வார்டு, பகுதி, மண்டலம், அஞ்சல் குறியீட்டு எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த திட்டத்துடன் சேர்த்து சென்னை தெருக்களின் உள்ள சாதிப் பெயர்களை நீக்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக 171வது வார்டின் பெயர் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

13-வது மண்டலம், 171 வது வார்டில் உள்ள ஒரு தெருவுக்கு அப்பாவோ கிராமணி என இருந்தது. இதிலிருந்த கிராமணி என்ற சாதிப்பெயர் தற்போது நீக்கப்பட்டு அப்பாவு (கி) என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் உள்ள தெருக்களின் சாதி பெயர்கள் நீக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என இந்நிகழ்விலிருந்து தெரியவந்துள்ளது. இதையடுத்து சென்னை மாநகராட்சியின் இந்த முடிவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories