தமிழ்நாடு

விளம்பரத்துக்காக அவதூறு பரப்பிய பா.ஜ.க நிர்வாகி; வட்டாட்சியரிடம் புகாரளித்து தி.மு.க நிர்வாகி அதிரடி!

தனக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக நிரூபித்தால் பள்ளிக்கு ஒப்படைப்பதாக பல்லடம் ஒன்றிய தி.மு.க நிர்வாகி வட்டாட்சியரிடம் மனு.

தி.மு.க. நிர்வாகி பாலசுப்பிரமணியம்
தி.மு.க. நிர்வாகி பாலசுப்பிரமணியம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜமாபந்தி கூட்டத்தில் பள்ளி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தவறான தகவல் அளித்த பா.ஜ.க நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகி வட்டாட்சியரிடத்தில் புகாரளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஜமாபந்தி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்லடத்திற்கு உட்பட்ட கரைப்புதூர் ஊராட்சி குன்னாங்கல் பாளையத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளியின் பின்புறம் உள்ள 4 செண்ட் நிலத்தை வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அந்த இடத்தை மீட்க வேண்டும் எனவும் அதே பகுதியை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி பூபாலன் வட்டாட்சியரிடம் மனு அளித்தார்.

இதனை அறிந்த பல்லடம் தி.மு.க ஒன்றிய துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம், அந்த இடம் மறைந்த அவரது தந்தையான ஈஸ்வரமூர்த்தி மற்றும் அவரது உறவினர் பெயரில் பட்டா உள்ளது எனவும், தி.மு.க கட்சியில் நீண்ட காலமாக உள்ளதால் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பா.ஜ.க நிர்வாகி அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் கூறியுள்ளதாகவும், பொய்யான புகார் அளித்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பள்ளிக்கு தேவைப்பட்டால் அந்த இடத்தை இலவசமாக வழங்குவதாகவும் பல்லடம் வட்டாட்சியர் நந்தகோபாலை சந்தித்து மனு வழங்கினார். மேலும் பொய்யான புகார் அளித்த பா.ஜ.கவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

தி.மு.க. நிர்வாகி மீது அவதூறாக பா.ஜ.க நிர்வாகி அளித்த புகாரால் பல்லடம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதோடு, சுய விளம்பரத்திற்காக இப்படியான செயல்களில் பா.ஜ.கவினர் ஈடுபட்டு வருவதாகவும் அப்பகுதி மக்களிடையே பேசப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories