நவீன ஊட்டியின் 200ஆம் ஆண்டு கொண்டாட்டங்களின் தொடக்கத்தின்போது, அதை உருவாக்கிய ஆங்கில அதிகாரி ஜான்சல்லிவனை நினைவு கூர்ந்ததற்காக அவருடைய ஐந்தாம் தலைமுறை வாரிசான பேராசிரியர் செல்வி ஓரியல் சல்லிவன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நவீன ஊட்டியின் 200வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களுக்கு முந்திய நாள் மாலையில் அதனை உருவாக்கியதாகப் போற்றப்படும் ஜான் சல்லிவனின் ஐந்தாவது தலைமுறை நேரடி வாரிசான செல்வி ஓரியல் சல்லிவன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது முன்னோடியை நினைவு கூர்ந்த பெருந்தன்மைக்காக நன்றி கூறி இ-மெயில் கடிதம் அனுப்பியுள்ளார்.
பேராசிரியர் ஓரியல் சல்லிவன் லண்டனில் உள்ள காலப்பயன்பாட்டு ஆராய்ச்சிப்பல்கலைக் கழகக் கல்லூரியின் (யு.சி.எல்.) இணை இயக்குநர் ஆவார். இவரது தந்தை நீலகிரி ஆவணக் காப்பகத்திற்கு ஜான்சல்லிவன் பற்றி மதிப்புமிக்க பொருட்களை வழங்கிய வழக்கறிஞரும், வரலாற்று ஆசிரியருமான டேவிட் சல்லிவன் ஆவார்.
ஓரியல் சல்லிவன் தனது இ-மெயில் கடிதத்தில் குறிப்பிட் டிருப்பதாவது :-
ஊட்டி உலகத்தின் அழகான இடங்களில் ஒன்றாகும். இது சுற்றுப்புற உயிரினங்களுக்கான மாபெரும் இடமாகவும், மொழி முக்கியத்துவம் பெற்ற இடமாக வும் உள்ளது. “அதனை மலை வாழ் உறைவிடமாக (மலை வாசஸ்தலமாக) மேம்படுத்து வதில் எங்கள் மூதாதையர்கள் முக்கியப் பங்காற்றினார்கள் என்று அறிவது எனக்கும் என் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் ஏற்படுத்துகிறது.
எங்கள் மூதாதையர் ஜான் சல்லிவனின் சிறந்த செயல்களை நினைவு கூர்ந்த நவீன ஊட்டியின் 200வது ஆண்டு விழாக்கொண்டாட்டங்களின் தொடக்கவிழா உரையில் நினைவு கூர்ந்ததங்களின் கனிவான செயலுக்காக நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அந்த உரை தங்களுடைய பெருந்தன்மையைப் பேசியது. அவ்வாறு ஓர் உயர்ந்த கவுரவத்தை காலனி அரசு அதிகாரி ஒருவருக்கு அளித்தது அவருக்கு அளிக்கப்பட்ட மாபெரும் கவுரவம் என்றுநான் நம்புகிறேன்.
இத்தகைய கவுரவம் ஒரு காலனி அரசின் அதிகாரிக்கு தன்னுடைய சொந்த நாட்டில் அல்லாமல், எந்த மக்களுடன் அவர் வாழ்ந்தாரோ அந்த மக்களால் வழங்கப்படுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். இது ஒரு குறிப்பிடத்தக்க வாக்குமூலமாக அவருடைய இயல்புக்கு வழங்கப்பட்டதாகும். நான் தங்களுக்கும், தங்களுடைய தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையுடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எங்களுடைய மூதாதையர் ஜான் சல்லிவனை நினைவு கூர்ந்ததற்காகவும், கவுரவித்ததற்காகவும் தங்கள் பெருந்தன்மைக்கு நன்றி.
இவ்வாறு பேராசிரியர் ஓரியல்சல்லிவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள இ-மெயில் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.