தமிழ்நாடு

போதை மாத்திரை வாங்கி கொடுப்பதில் தகராறு.. வாலிபர் வெட்டிக்கொலை : அதிரடியாக நடவடிக்கை எடுத்த போலிஸ்!

போதை மாத்திரை வாங்கி கொடுப்பதில் தகராறு ஏற்பட்டு வாலிபர் வெட்டிக்கொலை செய்த வழக்கில் போலிஸார் மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போதை மாத்திரை வாங்கி கொடுப்பதில் தகராறு.. வாலிபர் வெட்டிக்கொலை : அதிரடியாக நடவடிக்கை எடுத்த போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை கொருக்குப்பேட்டை ஹரிநாராயணபுரத்தை சேர்ந்தவர் ராகுல்(19). இவர் இந்த பகுதியில், போலிஸாருக்கு தெரியாமல் கஞ்சா போதை மாத்திரை ஆகியவை விற்று வந்துள்ளார். இதனிடையே கடந்த 15ஆம் தேதி போதை மாத்திரை வேண்டும் என மூன்று பேர் ராகுலிடம் 20,000 ரூபாய் பணம் கொடுத்துள்ளனர்.

ஆனால் மாத்திரை வாங்கி கொடுக்காமல் ராகுல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து அவர்கள் பணத்தை கேட்கும் போது பணம் கொடுக்காததால், 3 பேரும் ராகுலை கொலை செய்ய திட்டம் தீட்டி நேற்று இரவு ஹரி நாராயணபுரம் சென்று ராகுலிடம் போதை மாத்திரை கேட்டும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்போது பணத்தை திருப்பித் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்

இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால், ராகுலை தலை, முதுகு, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த ராகுலின் நண்பர் பார்த்துவிட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ராகுல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஆர்.கே.நகர் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரை சேர்ந்த சங்கர் என்கின்ற கௌரிசங்கர், தண்டையார்பேட்டை கைலாசம் தெருவை சேர்ந்தவர் சரவணன், வண்ணாரப்பேட்டை பென்சில் பேக்டரியை சேர்ந்த ரகுமான் ஆகிய மூன்று பேரையும் போலிஸார் கைது செய்தனர்.

இதனையடுத்து இவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த 15ஆம் தேதி போதை மாத்திரை வாங்கித்தர கோரி கொருக்குப்பேட்டை சேர்ந்தார் ராகுலிடம் 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும், பணத்தை வாங்கிக்கொண்டு மாத்திரை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்ததால் ஆத்திரமடைந்த வெட்டிக் கொலை செய்தோம் என்று கூறினர். அதன் பேரில் 3 பேரையும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories