விருதுநகர் மாவட்ட ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சிவச்சந்திரகுமார் என்பவர் ராஜபாளையம்- தென்காசி சாலையில் அமைந்துள்ள தனியார் மொபைல் விற்பனை நிலையம் மூலம் Samsung மொபைல் ஃபோன் வாங்கியுள்ளார்.
வாங்கிய மூன்றாவது நாளில் இருந்து அந்த மொபைல் ஃபோன் வேலை செய்யாத நிலையில் இது குறித்து பலமுறை நேரில் சென்று அணுகியும் குறைபாட்டை சரிசெய்து தரவில்லை என கூறப்படுகிறது .
இது குறித்து சிவசந்திகுமார் ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தரமற்ற மொபைல் போனை விற்பனை செய்த தொகையான ரூ.11,500 மற்றும் புகார் தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.20,000 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.3,000 ஆகியவற்றை கொடுக்க வேண்டுமென்று அந்த மொபைல் விற்பனை நிலையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த தொகைகளை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது மாதிரியான உத்தரவுகளின் மூலம் நுகர்வோர் தொடர்பான எந்த புகாராக இருந்தாலும் மாவட்ட குறைதீர் ஆணையம் தக்க நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது என்பதில் ஐயப்பாடில்லை.