தமிழ்நாடு

”இந்திய குடியுரிமை பெற கருவில் இருந்த சிசுவுக்கு உரிமையுண்டு” - சென்னை உயர்நீதிமன்ற உத்தரவும் விவரமும்!

”இந்திய குடியுரிமை பெற கருவில் இருந்த சிசுவுக்கு உரிமையுண்டு” - சென்னை உயர்நீதிமன்ற உத்தரவும் விவரமும்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெற்றோர் இந்திய குடியுரிமையை துறந்து, சிங்கப்பூர் குடியுரிமையை பெற்றாலும், வயிற்றில் சிசுவாக இருந்த குழந்தைக்கு இந்திய குடியுரிமை பெற உரிமை உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1998 ம் ஆண்டு இந்திய குடியுரிமையை துறந்து சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற போது, தாயின் வயிற்றில் ஏழரை மாத சிசுவாக இருந்த பிரணவ் சீனிவாசன், மேஜரான பின், 2017 ம் ஆண்டு இந்திய குடியுரிமை கோரி சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்தில் விண்ணப்பித்தார்.

ஆனால், பெற்றோர் இந்திய குடியுரிமையை இழந்து விட்டதால் பிரணவும் இந்திய குடியுரிமை துறந்து விட்டார் என்பதால், அவருக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது என, ஒன்றிய உள்துறை அமைச்சகம் அவரது விண்ணப்பத்தை நிராகரித்து உத்தரவு பிறப்பித்தது.

கடந்த 2019ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து பிரணவ் சீனிவாசன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், பெற்றோர் இந்திய குடியுரிமையை துறந்தாலும், அந்த காலகட்டத்தில் வயிற்றில் சிசுவாக இருந்த குழந்தை இந்திய குடியுரிமையை மீண்டும் பெறுவதற்கு உரிமை உள்ளது எனக் கூறி, அவருக்கு குடியுரிமை வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

banner

Related Stories

Related Stories