திருப்பத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ரகுராம். இவருக்கு சொந்தமாக நகை கடை ஒன்று உள்ளது. இதில் பணிபுரியும் மாரிமுத்து, அய்யனார் ஆகிய இருவர் சென்னையில் ஆர்டர் செய்த 5 கிலோ தங்க நகையை எடுத்துக்கொண்டு, கோயம்புத்தூர் இருந்து சென்னை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸில் ரயிலில் பயணம் செய்துள்ளனர்.
இந்த ரயில் ஜோலார்பேட்டை ரயில்நிலையத்திற்கு வந்தபோது, அதே பெட்டியில் பயணம் செய்த இரண்டு இளைஞர்கள் திடீரென மாரிமுத்து, அய்யனார் முகத்தில் பெப்பர் ஸ்பேரே அடித்து அவர்களிடம் இருந்த 2 கோடி மதிப்பிலான 5 கிலோ தங்க நகையை கொள்ளையடிக்க ரயிலை விட்டு இறங்கித் தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து மாரிமுத்து , அய்யனார் ஆகிய இருவரும் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலிஸார் 2 தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களை பிடிக்க உடனே விசாரணை தொடங்கினர்.
இதையடுத்து ஜோலார்பேட்டை ரயில்நிலையத்தில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை, கொள்ளை நடந்த ரயில் பெட்டியில் பயணம் செய்தவர்களிடம் நகையை திருடியவர்களின் அங்க அடையாளங்கள் குறித்து விசாரணை செய்தனர். பின்னர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கேரளா மாநிலத்தை சேர்ந்த அஷரப் மற்றும் சூரஜ் என்பதும் தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் கோயம்புத்தூரில் இருந்தே மாரிமுத்து, அய்யனாரை பின்தொடர்ந்து நகைகளை கொள்ளையடிக்க திட்டம் தீட்டிவந்துள்ளனர். மேலும் இவர்களுக்கு நகை குறித்த விவரத்தை மதுரையை சேர்ந்த ராஜன் என்பவர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் இருவரும், அவர்களை பயணம் செய்த அதேபெட்டியில் பயணம் செய்து நகையை திட்டம்போட்டு கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பிறகு விசாரணையில் தெரிந்தது. பிறகு அஷரப் , சூரஜ் இவர்கள் இருவரையும் போலிஸார் கைது செய்து 5 கிலோ தங்கை நகையையும் பறிமுதல் செய்தனர். மேலும், ரயிலில் நகை எடுத்து வருவது குறித்து இவர்களுக்கு தகவல் கொடுத்த ராஜன் என்பவரை போலிஸார் தேடிவருகின்றனர்.