தமிழ்நாடு

சாலையில் மயங்கிய இஸ்லாமிய பெண்.. முதலுதவி செய்து ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பிவைத்த போலிஸ்!

வாணியம்பாடியில் சாலையில் திடீரென்று மயங்கி விழுந்த இஸ்லாமிய பெண்ணுக்கு உதவி போலிஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சாலையில் மயங்கிய இஸ்லாமிய பெண்.. முதலுதவி செய்து ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பிவைத்த போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஈகைத் திருநாளாம் ரமலான் பண்டிகையை இன்று இஸ்லாமியர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காதர்பேட்டை ஈத்கா மைதானத்தில் ரமலான் பண்டிகை முன்னிட்டு சிறப்புத் தொழுகை நடைபெற்றுள்ளது.

இதில் அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் பலரும் வந்து சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த இஸ்லாமிய பெண் ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்தார். அதை பார்த்த அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் உடனடியாக பெண் போலிஸார் உதவியுடன் அந்த இஸ்லாமிய பெண்ணை மீட்டு தண்ணீர் கொடுத்துள்ளார்.

பிறகு அவருக்கு முதலுதவிகள் செய்து ஒரு ஆட்டோவை வரவழைத்து பத்திரமாக அதில் ஏற்றி அவரை வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர்.இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் போலிஸாரின் இந்த செயலை பார்த்துப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.மேலும் இது தொடர்பான சி.சி.டி.வி காட்சி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோபார்த்த பலரும் போலிஸாரை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories