தமிழ்நாடு

"தமிழர்கள் யாருக்கும் அடிமை இல்லை.. இதை ஒன்றிய அரசுக்கு புரிய வைப்போம்" : உதயநிதி ஸ்டாலின் MLA பேச்சு!

நீட் தேர்வில் இருந்து நிச்சயம் விலக்கு கிடைக்கும் என உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

"தமிழர்கள் யாருக்கும் அடிமை இல்லை.. இதை ஒன்றிய அரசுக்கு புரிய வைப்போம்" : உதயநிதி ஸ்டாலின் MLA பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க மாணவரணி சார்வில் கல்வி, சமூக நீதி, கூட்டாட்சி தத்துவம் என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய மாநாடு சென்னை கலைவானர் அரங்கில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் அமைச்சர்கள் க.பொன்முடி, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ்பொய்யாமொழி, கேரளா மாநில தொழில் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ராஜீவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, கேரளா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோஷ் குமார்,

ஆம் ஆத்மி கட்சி முன்னாள் சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி, சமூக செயற்பாட்டாளரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான கண்ணன் கோபிநாதன், இந்திய தேசிய காங்கிரஸ் கன்னையா குமார், பத்திரிகையாளரும், எழுத்தாளருமான சீமா சிஷ்டி, எழுத்தாளரும், பெரியாரிஸ்ட் திலீப் மண்டல் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

இதையடுத்து மாநாட்டின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ,"தங்கை அனிதாவின் அண்ணன் என்கிற தகுதியின் அடிப்படையில் தான் இந்நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். அனிதாவின் மரணம் தற்கொலை இல்லை, அது கொலை. ஒன்றிய பா.ஜ.க அரசும், அ.தி.மு.க வும் சேர்ந்து செய்த கொலை.

"தமிழர்கள் யாருக்கும் அடிமை இல்லை.. இதை ஒன்றிய அரசுக்கு புரிய வைப்போம்" : உதயநிதி ஸ்டாலின் MLA பேச்சு!

கடந்த 4 ஆண்டுகளில் 16 பேர் நீட் தேர்வால் மரணமடைந்து உள்ளனர். இறந்த மாணவர்கள் குடும்பத்தினர் தன் கையை பற்றி, நீட் தேர்வைத் தமிழகத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று அழுதது இன்னும் தனக்கு ஞாபகம் இருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பாமல் இருப்பது 7 கோடி தமிழர்களை அவமதிக்கும் செயலாகும். தி.மு.க அரசு தொடர்ந்து நீட் விலக்கு கிடைக்கும் வரைபோராடும்.

திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு நீட் தேர்விலிருந்து நிச்சயம் விலக்கு கிடைக்கும், தமிழ்நாட்டைப்போன்ற மற்ற மாநிலங்களும் நீட்டுக்கு எதிராகக் குரல் கொடுக்க ஒன்றிணைய வேண்டும்.நீட் ஒரு தொடக்கம் என்பது போல கியூட் தேர்வைவையும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதனை தொடக்கத்திலேயே நாம் எதிர்ப்போம்.

கல்வி மாநில பட்டியலில் தான் இருக்க வேண்டும்.மாநில அரசு அடிமைகள் என்று ஒன்றிய பாஜக அரசு நினைக்கிறது. ஆனால் தமிழர்கள் யாருக்கும் அடிமை இல்லை என்பதைப் புரிய வைப்போம். பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் உள்ள தலைவர்கள் அனைவரும் ஓரணியில் நின்று புதிய கல்வி கொள்கையை எதிர்க்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories