முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கழக அரசு தமிழ்நாட்டு மக்களுக்காக பல்வேறு ஆக்கப்பூர் திட்டங்களை அமல்படுத்தி உலகம் முழுவதும் இருந்து பாராட்டைப் பெற்று வருகிறது. கழக அரசின் 'திராவிட மாடல்' ஆட்சியைப் பின்பற்றி பல்வேறு மாநில அரசுகளும் தங்கள் மாநிலங்களுக்கு ஏற்ற திட்டங்களை வகுத்து வருகின்றனர்.
அதேபோல், மாற்றுக் கட்சியின் நல்ல ஆலோசனைகள் கூறினாலும், அதை நிராகரிக்காமல் அதையும் நடைமுறைப்படுத்தும் அரசாக தி.மு.க அரசு உள்ளது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கைக்கு, நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்டு, வீடில்லாமல், சாலையில் உலவுவோர் குறை தீர்ப்பது பற்றி வரைவு அறிக்கையைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை 144 பக்கங்களைக் கொண்டது.
இந்நிலையில் கே.பாலகிருஷ்ணன், "வரைவு அறிக்கை ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. இதை தமிழில் வெளியிட வேண்டும். மாவட்ட அளவில் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி களப்பணியாளர்களிடமும், பொதுமக்களிடம் கருத்துக்களைப் பெற்ற பின்னர், வரைவு அறிக்கையை இறுதி செய்ய வேண்டும்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதைப்பார்த்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன நடவடிக்கை எடுப்பதாக பதிலளித்துள்ளார். இது குறித்து மா.சுப்பிரமணியன் ட்விட்டர் பதிவில், "தங்களின் கருத்து மிகவும் ஏற்புடையது.வரைவு அறிக்கையை தமிழ்படுத்துவது மற்றும் கால நீடிப்பு சம்பந்தமாக விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என தெரிவித்துள்ளார்.