தமிழ்நாடு

சத்துமாவுக்காக தற்கொலை நாடகம்.. இனிமா கொடுக்கும் போது எழுந்து நின்று டாக்டர்களை உறைய வைத்த +1 மாணவன்!

சக மாணவர்களிடம் விஷம் சாப்பிட்டுவிட்டதாக கூறிய மாணவன் பரிசோதனையின் போது கண் விழித்து எழுந்தது அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது.

சத்துமாவுக்காக தற்கொலை நாடகம்.. இனிமா கொடுக்கும் போது எழுந்து நின்று டாக்டர்களை உறைய வைத்த +1 மாணவன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

11ம் வகுப்பு மாணவன் தனது சக மாணவர்களிடம் விஷம் சாப்பிட்டுவிட்டதாக கூறிய சம்பவம் விழுப்புரத்தில் உள்ள அரசு பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கோலியனூர் வள்ளலார் நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுவன் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறான்.

நேற்று (ஏப்.,22) காலை எப்போதும்போது வகுப்பில் பாடங்களை கவனித்து வந்த அரவிந்தன் என்ற மாணவன் இடைவேளையின் போது தனது பையில் மடித்து வைத்திருந்த பேப்பரில் இருந்து எதையோ எடுத்து சாப்பிட்டிருக்கிறான்.

அதனை கண்ட சக மாணவர்கள் என்ன சாப்பிடுகிறாய் என கேட்டதற்கு விஷம் என அரவிந்தன் கூறியிருக்கிறான். இதனை கேட்டு அதிர்ச்சியுற்ற மாணவர்கள் ஆசிரியரிடத்தில் தகவலை கூறிவிட்டு விஷம் சாப்பிட்டதாக சொன்ன அரவிந்தனை முதலில் கோலியனூர் ஆரம்ப சுகாதார

நிலையத்தில் சேர்த்து பின்பு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.

அங்கு சிறுவன் அரவிந்தனுக்கு ஊசி செலுத்தி இனிமா கொடுக்க முயற்சித்த போது மாணவன் கண் விழித்து எழுந்திருக்கிறான். அப்போது தான் விஷம் சாப்பிடவில்லை என்றும், சத்துமாவைதான் சாப்பிட்டதாகவும், சக மாணவர்கள் அதனை வாங்கி விடுவார்கள் என்று எண்ணி விஷம் சாப்பிட்டதாகவும் கூறியிருக்கிறான்.

இதனை கேட்டு அதிர்ச்சியுற்ற மருத்துவர்கள் சிறுவனுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்திருக்கிறார்கள். மாணவனின் இந்த குறும்புத்தனத்தால் ஆசிரியர்கள், சக மாணவர்கள் என பலரும் பதற்றமடைந்திருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories