புதுக்கோட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளம் பெண் ஒருவர் வொர்க் ஃப்ரம் ஹோம் வேலையாக ஆன்லைனில் தேடிவந்துள்ளார். அப்போது அவரது வாட்ஸ் ஆப்பிற்கு ஆன்லைன் மூலம் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று அறிமுகமாகியுள்ளது.
மேலும் இந்த வேலையில் சிறிய தொகை முதலீடு செய்தால் மாதம் மாதம் நல்ல வருமானம் ஈட்ட முடியும் எனவும் கூறியுள்ளனர். இதனால் அந்தப் பெண் அந்த நிறுவனத்தில் சேர்ந்து வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் பல்வேறு தவணையாக ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் வரை பணம் முதலீடு செய்துள்ளார். ஆனால் அவர்கள் கூறியபடி அவருக்கு எந்த லாபமும் வரவில்லை.
பின்னர் தான் அந்த பெண்ணுக்கு தாம் ஏமாற்றப்பட்டத்தை உணர்ந்துள்ளார். பிறகு இது குறித்து புதுக்கோட்டை சைபர் க்ரைம் போலிஸாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.
அதில், அந்த பெண்ணிடம் மோசடி செய்தது விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த காளிமுத்து, மன்னவன் என்பது தெரியவந்தது. பிறகு இவரையும் போலிஸார் கைது செய்து அவர்களிடம் இருந்து செல்போன்கள் மற்றும் மடிக்கணினிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் இவர்கள் இருவருக்கு தலைவனாக இருந்து செயல்பட்டு வரும் சோமசுந்தரம் என்பவர் துபாயில் இருப்பதும் போலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலிஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.