தமிழ்நாடு

காணொளி விசாரணையில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட வழக்கறிஞர்.. சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு!

காணொளிக் காட்சி விசாரணையின்போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

காணொளி விசாரணையில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட வழக்கறிஞர்.. சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உயர்நீதிமன்ற காணொளிக்காட்சி விசாரணையின் போது, கேமரா இயக்கத்தில் இருந்தது தெரியாமல் வழக்கறிஞர் ஒருவர், பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இதுதொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் தலைமையிலான அமர்வு. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

அதில், சம்மந்தப்பட்ட வழக்கறிஞரை தொழில் செய்ய தடை விதித்தும், சி.பி.சி.ஐ.டி போலிஸார் வழக்குப் பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும், இரண்டு வாரங்கள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் ஏற்கனவே வழக்கறிஞர் 34 நாட்களாக சிறை தண்டனை அனுபவித்து வருவதால், தண்டனையை கழித்துக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், இந்த வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுத்த சி.பி.சி.ஐ.டி-க்கு நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories