தமிழ்நாடு

”மாணவர்கள் ஃபுட் போர்டில் தொங்கிக்கொண்டு பயணித்தால்...” - டி.ஜி.பி சைலேந்திரபாபு விடுத்த முக்கிய உத்தரவு!

பேருந்து படிக்கட்டுகளில் பயணிப்பதை கண்காணிக்கும்படி காவல்துறையினருக்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

”மாணவர்கள் ஃபுட் போர்டில் தொங்கிக்கொண்டு பயணித்தால்...” - டி.ஜி.பி சைலேந்திரபாபு விடுத்த முக்கிய உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொற்றிக் கொண்டும், தனியார் சரக்கு வாகனங்களில் அபாயகரமாக பயணம் செய்வது போன்றவற்றை கண்காணிக்கவும் தடுக்கவும் காவலர்களுக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் காவலர்களுக்கு இன்று குறிப்பானை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த குறிப்பாணையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொற்றிக் கொண்டு, தனியார் சரக்கு வாகனங்களில் அபாயகரமான பயணம் செய்வது போன்ற புகைப்படங்கள் செய்தித்தாள் மற்றும் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

”மாணவர்கள் ஃபுட் போர்டில் தொங்கிக்கொண்டு பயணித்தால்...” - டி.ஜி.பி சைலேந்திரபாபு விடுத்த முக்கிய உத்தரவு!

இவ்வாறு பயணிப்பது உயிரிழப்பு மற்றும் பெருங்காயத்தை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தை கொண்டுள்ளது. எனவே இத்தகைய அபாயகரமான பயணங்களை தடுக்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென காவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என்றும் அதில் தெரிவித்திருந்தார்.

அதேபோல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் நிர்வாகத்தின் மூலம் மாணவர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், தனியார் சரக்கு வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு இத்தகைய பயணங்களை அனுமதிக்கக் கூடாது என்றும் காவல்துறை சார்பில் அறிவுறுத்த படவேண்டும்.

மேலும், அரசு போக்குவரத்து துறை அதிகாரி உடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories